புதன், 2 டிசம்பர், 2015

மத்திய அரசுக்கு திமுக அவசர கோரிக்கை ..வெள்ளம் ...தேசிய இடர் பிரகடன படுத்தவும்!

DMK urges Centre to declare Chennai flood national disaster சென்னை: சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் தவித்து வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் நேற்று மதியம் முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. துணை மின் நிலையங்களிலும் வெள்ளம் சூழ்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் வேளச்சேரி, மடிப்பாக்கம், நங்கநல்லூர், கிண்டி, நந்தம்பாக்கம், ராமபுரம், போரூர், வடபழநி, கோட்டூர்புரம் மற்றும் புறநகர் பகுதிகள் இருளில் மூழ்கின. மக்களின் வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், செல்போன்களை சார்ஜ் செய்ய முடியவில்லை. மேலும், 60 சதவீத செல்போன் கோபுரங்களும் பாதிக்கப்பட்டன. இதனால் மக்கள் அவசரத்திற்கு கூட உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாமல்பெரும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். மக்களை மேலும் அவதிக்குள்ளாக்கும் வகையில், ஏ.டி.எம். சேவைகளும் முடங்கின. இதனால் அவசரத்திற்கு கூட மக்களால் பணம் எடுக்கமுடியவில்லை. பெட்ரோல் பங்குகளும் தண்ணீரில் மூழ்கியுள்ளதால், வாகனங்களுக்கும் எரிபொருள் நிரப்ப முடியவில்லை. காஞ்சி, திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களிலும் இதே நிலை நீடிப்பதாக கூறப்படுகிறது. webdunia.com

கருத்துகள் இல்லை: