ஞாயிறு, 29 நவம்பர், 2015

தேமுதிக தேவை இல்லை...கனிமொழி கலைஞரிடம் வேண்டுகோள்?

விஜயகாந்த் கருணையால் தான், தி.மு.க., தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதில்லை; அவர் இல்லாமலேயே, தேர்தலை சந்திக்கத் தயாராவோம்' என, அக்கட்சியின் மகளிர் அணி செயலர் கனிமொழி, கட்சித் தலைவர் கருணாநிதியிடம் கூறிய தகவல் வெளியாகி உள்ளது. லோக்சபா தேர்தலில், காங்கிரசை கழற்றிவிட்ட தி.மு.க., தலைமை, தே.மு.தி.க.,வை இழுக்க முயற்சித்தது. ஆனால், போக்குக் காட்டிய விஜயகாந்த், கடைசி நேரத்தில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்தார்; அனைத்து இடங்களிலும் தோற்றார். வழக்கமாக தேர்தலில், 10 சதவீத ஓட்டுகளை பெறும் விஜய காந்த், 6 சதவீத அளவுக்கு சுருங்கினார். அதே போல, தி.மு.க.,வும், 30 சதவீதத்தில் இருந்து, 26 சதவீத ஓட்டுகளுக்கு சுருங்கியது. இதனால், சட்டசபை தேர்தலில், இரு கட்சிகளும் கூட்டணி சேர வேண்டும் என, தொண்டர்கள் விரும்பினர். அதன் மூலமே, ஜெயலலிதாவை வீழ்த்த முடியும் என்று கணக்குப் போட்டனர். இதற்காக, தே.மு.தி.க., தரப்பிடம் பேச்சு நடத்திய கனிமொழி, அது பலிக்காததால், விஜயகாந்த் மீது கடும் அதிருப்தியடைந்துள்ளார். பிரேமலதா திமுகவை மக்சிமம் வெறுப்பேற்றுவது அதிக சீட் பெறுவதற்கான தந்திரம்தான். இவிங்கள கண்டுக்காம விட்டாலே போதும் காணாம போயிடுவாங்க இதுவெறும் பலூன் கட்சிங்க...  


இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:மக்கள் நலனுக்காக இடிக்கப்பட்ட மண்டப விவகாரத்தை, விஜயகாந்த் தொடர்ந்து பேசுகிறார். கூட்டணிக்கு வராமலிருக்க, சொத்தை காரணங்களை சொல்கிறார். எதிர்க்கட்சித் தலைவராக உள்ள விஜயகாந்தை, ஜெயலலிதா அவமானப்படுத்திய பின்னும், அவரை வீழ்த்துவதில், அவர் தான் முனைப்புடன் இருக்க வேண்டும். ஆனால், தி.மு.க.,வுக்கு மட்டுமே, அந்த ஆதங்கமும், நிர்ப்பந்தமும் இருப்பதாக நினைக்கிறார். மோசமான தோல்விக்கு பின்னும், தி.மு.க., எழுந்து நிற்கும் கட்சி. ஆனால், இனியொரு தோல்வியை சந்தித்தால், தே.மு.தி.க., இருப்பது கஷ்டம். எனவே, அவர் தான், தி.மு.க.,வை தேடி வர வேண்டும்.

தயார்:

ஏற்கனவே, விஜயகாந்த் இல்லாமல், சட்டசபை தேர்தலை சந்திக்க, தி.மு.க., தயாராகி விட்டது. ஓட்டு சதவீதமும், சமூக நீதியும் தான், தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கின்றன. அந்த வகையில், தி.மு.க., - காங்., - புதிய தமிழகம், ச.ம.க., - ம.தி.மு.க., - த.மா.கா., உள்ளிட்ட கட்சிகள் இணைந்து, தேர்தலை சந்திக்கும் போது, 37 சதவீத ஓட்டுகள் கிடைக்கும். ஆட்சிக்கு எதிரான ஓட்டுகளும் சேர்ந்தால், தி.மு.க., கூட்டணியால், 40 சதவீத ஓட்டு பெற முடியும். இந்த விவரங்களை கனிமொழி, கருணாநிதியிடம் தெரிவித்து, அதை நோக்கியே செல்வோம் என, குறிப்பிட்டு உள்ளார். இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. தினமலர்.com

- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை: