
வறண்டு கிடந்த ஆறுகளில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்நிலைகள் நிரம்பி, உபரி நீரை வெளியேற்றும் நிலை உருவாகி உள்ளது. அதே சமயம், வீணாக கடலில் கலந்த மழைநீரின் அளவை, துல்லியமாக கண்டறிய முடியவில்லை. நீர்நிலைகளில் தேங்கியதை விட, சாலைகளில் அதிகளவு மழைநீர் தேங்கியதே இதற்கு காரணம் .மழை நீரை சேமிக்க தடுப்பணைகள் கூட கிடையாது... பிறகு எப்படி வீணானது என்று சொல்ல முடியும்... அப்படிப்பார்த்தால் நீர் கடலுக்குத்தான் செல்கிறது...
>இதுகுறித்து, பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
படுகைகளில், 45 இடங்களில், பொதுப்பணித்துறையின் வானிலை நிலையங்கள் உள்ளன. குறுகிய காலத்தில், அதிகளவு மழை பெய்துள்ளது. நீர்நிலைகள் நிரம்புவதற்குள், சாலைகளில் அதிகளவு வெள்ள நீர் ஓடியது. கடலோர மாவட்டங்களில், இதுபோன்ற வெள்ளம் அதிகளவு இருந்தது. வழக்கமாக, கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் கிடைக்கும் மழைநீர் உடனடியாக கடலை சென்று சேர்ந்துவிடும். அணைகள், நீர்த்தேக்கங்கள், ஏரிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் அளவை வைத்தே வீணான நீரின் அளவை கண்டுபிடிக்க முடியும். வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கும் தகவலை வைத்தே, வீணான வெள்ளநீரை கணக்கிட இயலும்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர்- -தினமலர்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக