செவ்வாய், 1 டிசம்பர், 2015

மதரசா பள்ளிகளில் பாலியல் வன்கொடுமை நடப்பதாக பிரபல திரைப்பட இயக்குனர் அலி அக்பர் பரபரப்பு புகார்


Director Ali Akbar reavals his experience that he is also a victim of sexual abuse in Madrasa திருவனந்தபுரம்: கேரளாவில் மதரசா எனும் இஸ்லாமிய பள்ளிகளில் பாலியல் வன்முறை சம்பவங்கள் நிகழ்வதாக, பிரபல திரைப்பட இயக்குனர் அலி அக்பர் பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 7 ஆயிரம் மதராசா எனும் இஸ்லாமிய உள்ளன. அவற்றில் சுமார் 3.5 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கேரளாவில் உள்ள மதரசா பள்ளிகளில் பாலியல் வன்முறை சம்பவங்கள் நடப்பதாக பிரபல திரைப்பட இயக்குனர் அலி அக்பர் திடுக்கிடும் புகாரை கூறியுள்ளார். மதரசா பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு அங்கு இருக்கும் மதகுருமார்கள் பாலியல் தொல்லை தருவதாக அவர் குற்றம்சாட்டினார். Filmmaker Ali Akbar Alleges Sex Abuse in Kerala Madrasa மதம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், இந்த விவகாரத்தை யாரும் வெளியில் சொல்வதில்லை. 40 ஆண்டுகளுக்கு முன்பு வயநாட்டில் உள்ள மதரசாவில் தனக்கு இக்கொடுமை நடந்ததாகவும் இயக்குனர் அலி அக்பர் குறிப்பிட்டார்.
கேரளாவில் உள்ள மதரசாக்களில் பாலியல் வன்முறை சம்பவங்கள் நிகழ்வதாகவும் தெரிவித்துள்ளார். வாக்கு வங்கிக்காக இத்தகைய சம்பவங்கள் மூடி மறைக்கப்படுவதாகவும், இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அலி அக்பர் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள கேரளா சமூக நலத்துறை அமைச்சர் முனிர், இந்த பிரச்சினையை வெளி கொண்டுவந்ததை வரவேற்கிறேன். இதுபோன்ற சம்பவங்கள் எந்த மதத்தினருக்கு நடந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த செயல்களில் ஈடுபடுவோரை இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம் எனத் தெரிவித்தார். Read more at//tamil.oneindia.com/n

கருத்துகள் இல்லை: