வியாழன், 3 டிசம்பர், 2015

குஜராத் உள்ளாட்சி தேர்தல்: காங். அபார வெற்றி..15 ஆண்டுகளில் பின் காங்கிரஸ் வெற்றி....

ஆமதாபாத்: குஜராத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், காங்கிரஸ் அபார வெற்றி பெற்றுள்ளது. மாநகராட்சிகளில் மட்டும், பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது.
குஜராத்தில், 12 ஆண்டுகளாக முதல்வராக இருந்த நரேந்திர மோடி, கடந்த ஆண்டு பிரதமரானார். முதல்வராக அவர் இருந்த போது, அம்மாநில சட்டசபை தேர்தல் மட்டுமின்றி, உள்ளாட்சி தேர்தல்களிலும், பா.ஜ., அபார வெற்றி பெற்றது; காங்கிரஸ் ஓரிரு இடங்களைத் தான் பெற முடிந்தது. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. குஜராத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த, ஆனந்திபென் படேல், முதல்வராக உள்ளார். அவர் தலைமையில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ., பல இடங்களில் தோல்வி அடைந்துள்ளது.
கடந்த மாதம், இரண்டு நாட்கள் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன. அதில், மாவட்ட பஞ்சாயத்து, தாலுகா பஞ்சாயத்து போன்றவற்றில், 15 ஆண்டுகளில் இல்லாத வகையில், காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
எனினும், ஆமதாபாத், சூரத் உட்பட, ஆறு மாநகராட்சிகளை, பா.ஜ.,வே கைப்பற்றியுள்ளது.
இந்த திடீர் மாற்றத்திற்கு, படேல் ஜாதியினரின் ஆதரவு மாற்றம் தான் காரணம் என, கூறப்படுகிறது. முந்தைய தேர்தல்களில், பா.ஜ.,வுக்கு ஆதரவாக இருந்த அந்த ஜாதியினர், இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வருவதாலும், அவர்களின் போராட்டத்திற்கு, காங்கிரஸ் ஆதரவு அளித்து வருவதாலும், ஓட்டுகள் மாறியுள்ளன என, கூறப்படுகிறது.  தினமலர்.com

கருத்துகள் இல்லை: