வியாழன், 3 டிசம்பர், 2015

மியான்மர் அதிபருடன் ஆங் சான் சூகி அதிகாரங்களை மாற்றுவது தொடர்பாக பேச்சுவார்த்தை....

கடந்த மாதம் மியான்மரில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. புதிய அரசாங்கம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் செயல்படத் தொடங்கும். ராணுவத்தின் சார்பில் போட்டியிட்ட மேம்பாட்டு கட்சி வேட்பாளர்கள் படுதோல்வி கண்டாலும் நாட்டின் அதிகாரம் முழுவதும் ராணுவ தளபதி மின் ஆங் ஹெலாங், அதிபர் தெய்ன்சீன் ஆகியோரிடம்தான் இன்னும் இருக்கிறது. எனவே, அமையவிருக்கும் புதிய அரசாங்கத்துக்கு அதிகாரங்களை மாற்றுவது தொடர்பாக ஆங் சான் சூகி அதிபர் தெய்ன் சீனை நேற்று சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு 45 நிமிடங்கள் நீடித்தது. அப்போது ஆட்சியை சுமுகமாக நடத்துவதற்கு ஒத்துழைக்குமாறு ஆங் சான் சூகி கேட்டுக் கொண்டார். < இதைத் தொடர்ந்து ராணுவ தளபதி மின் ஆங் ஹெலாங்கையும் அவர் சந்தித்து பேசினார் dailythanthi.com

கருத்துகள் இல்லை: