திங்கள், 30 நவம்பர், 2015

2040 ஆம் ஆண்டில் துணையைச் சந்திக்கும் “பர்ஸ்ட் டேட்” சாத்தியமே இல்லையாம்- சொல்கிறது ஆய்வு

லண்டன்: உலகில் காதலுக்காகவோ, நட்புக்காகவோ சக மனிதர்களுடன் முதல் முறையாக நேரடியாக சந்திப்பது வரும் 2040 ஆம் ஆண்டுக்குள் ஏட்டுகளில் மட்டுமே காணக் கிடைக்கும் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. தொழில்நுட்பத்தின் உச்சபட்ச முன்னேற்றத்தால் 2040 ஆம் ஆண்டு எழுபது சதவிகிதம் பேர் தனக்கு பிடித்த நபரை சந்திக்க விர்ச்சுவல் தொழில்நுட்பத்தைத்தான் நாடுவார்களாம். First dates in the real world could be history by 2040, research suggests 
இந்த வித்தியாசமான முடிவு லண்டனின் இம்ப்பீரியல் வர்த்தகக் கல்லூரியின் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. துணையைத் தேட உதவும்: இந்தத் தொழில்நுட்ப முன்னேற்றம் நமக்கான துணையைத் தேட எளிதில் உதவும் எனவும் தெரியவந்துள்ளது. 
அதாவது, நமது மரபணு மூலக்கூறு அமைப்பை வைத்து அதற்கேற்ற துணையைத் தேடிக்கொள்ளலாம். கைகோர்த்தல் நிச்சயம்: இந்த விர்ச்சுவல் தொழில்நுட்பம், நமது ஐம்புலன்களையும் பயன்படுத்த உதவும். ஆகவே, பூமியின் இருவேறு மூலையில் இருப்பவர்களும் இதன் மூலமாகக் கைகோர்த்துக் கொள்ளலாம். 
பல்லாண்டு கால வாழ்க்கை: இந்த ஆராய்ச்சி, நூறு ஆண்டுகளுக்கும் முந்தைய மனிதர்களின் நடவடிக்கை தொடர்பான குறிப்புகள், நேர்காணல்கள் ஆகியவற்றைக்கொண்டு முடிவுக்கு வரப்பட்டுள்ளது. உதவிய மானுடவியல் குறிப்புகள்: மேலும், மானுடவியல் என்னும் ஆந்தரபாலஜி, சமூகவியல், தொழில்நுட்பம், உயிரியியல் மற்றும் மருத்துவம் போன்றவற்றில் வல்லுனர்களின் கருத்தைக் கொண்டு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more at: //tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: