புதன், 12 பிப்ரவரி, 2014

நடிகர் மாதவன் : போராட்டம்: கொடுமைப்படுத்தப்படும் யானையை விடுவிக்க வேண்டும்

இருட்டறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தப்படும் யானையை விடுவிக்க வேண்டும் என்று போராட்டம் தொடங்கி இருக்கிறார் நடிகர் மாதவன். பிராணிகள் வதை தடுப்பு அமைப்பான பீட்டாவில் உறுப்பினராக இருக்கிறார் மாதவன். மிருகங்கள், செல்லப் பிராணிகளிடம் பாசம் காட்டி வளர்க்க வேண்டும், அவைகள் சுதந்திரமாக விடப்படவேண்டும் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் வலியுறுத்தி வருகிறார். சமீபகாலமாக மும்பையில் மாதவன் கையில்,  ஒரு கரும்பலகை வைத்திருக்கும் போஸ்டர்கள் காணப்படுகின்றன.
அந்த போஸ்டடில், ‘’சுந்தர் சுதந்திரமாக விடப்பட வேண்டும்’’ என்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாதவன் கூறும்போது, ’’எம்எல்ஏ ஒருவர் மகாராஷ்டிராவில் உள்ள ஜியோதிபா கோயிலுக்கு யானை ஒன்று பரிசளித்தார்.
 அந்த யானையை அங்குள்ள சிலர் இருட்டறையில் இரும்பு சங்கிலியால் கட்டி  அடைத்து வைத்து அடித்து துன்புறுத்துகின்றனர். இந்த தகவல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகளை பார்க்கும்போது மனம் பதறுகிறது.
இந்த கொடுமை நிறுத்தப்பட வேண்டும். சுந்தர் என்ற அந்த யானையை உடனடியாக சுதந்திரமாக விட வேண்டும் என்று மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதனை ஏற்று உத்தரவு பிறப்பிக்கப் பட்டு ள்ளது. ஆனால் இதுவரை அது விடுவிக்கப்படவில்லை. சிறிய வயதே ஆன அந்த யானையை உடனடியாக விடுவிக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார். nakkheeran.in

கருத்துகள் இல்லை: