ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

தகுதியுள்ள இளைஞர்கள் உள்ள மாநிலப் பட்டியலில் குஜராத்துக்கு இடம் இல்லை ! உடைந்து போன இன்னொரு குஜராத் குட்டு !

புதுடில்லி, பிப்.7- வேலை வாய்ப்பு பெறுவ தற்கான அதிக அளவு திறமை படைத்த இளைஞர் கள் அதிக அளவில் இருக் கும் மாநிலங்களின் பட்டிய லில் முதல் பத்து இடங் களில் குஜராத் இடம் பெற் றிருக்கவில்லை. அதே போல ஆற்றல் நிறைந்த மாணவர்கள் அதிக அள வில் இருக்கும் நகரங்களில் பட்டியலிலும் முதல் பத்து இடங்களிலும் குஜராத் மாநில நகரங்கள் எதுவும் இடம் பெற்றிருக்கவில்லை. இதுதான் மோடியின் ஆட்சி யில் குஜராத் இளைஞர்கள் வளர்த்துக் கொண்ட திறமையா? இதைத்தான் மோடி இந்திய இளைஞர் களுக்கான கனவு என்று சொல்லுகிறாரோ! குஜ ராத்தை முன்னேறிய மாநி லமாக, வளர்ச்சி அடைந்த மாநிலமாக மோடியின் தொண்டர்கள் படம் காட்டு கிறார்கள். ஆனால் உண்மை யான கள நிலவர மும், ஆதார தகவல்களும் அவர் களுடைய முகமூடியைக் கிழிப்பவையாக உள்ளன.
ஒரு லட்சம்  பட்ட தாரி மாணவர்களின் பல் வேறு பட்ட ஆற்றல்களைப் பற்றி ஒரு மதிப்பீடு மேற் கொண்ட போது, பணி நிய மனம் பெறுவதற்கு அவர் களில் 34 விழுக்காட்டினர் மட் டுமே தகுதி பெற்றவர் களாக இருந்தனர் என் பதும், அவர்களில் ஆண் களை விட பெண்கள் தகுதி மேம்பட்டவர்களாக இருந் தனர் என்பதும் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு பணி நியமனம் பெற தகுதி படைத்தவர் களில் பெரும் பகுதியினர் பஞ்சாப், தமிழ் நாடு, உத்தரப்பிரதேசம், டில்லி, ஆந்திரப் பிரதேசம், அரியானா, ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங் களில் இருப்பவர்களா கவே அமைந்திருந்தனர் என்பதும் தெரிய வந்துள் ளது.   நாகாலாந்து, மேகா லயா, ஜம்மு-காஷ்மீர், மணிபூர், ஜார்கண்ட் மற் றும் பிகார் ஆகிய மாநி லங்கள் இப்பட்டியலில் கடைசி நிலையில் இடம் பெற்றுள்ளன.
கடைக்கோடி குஜராத்
28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மாணவர்களிடம், கணித, தர்க்கவாத, தகவல் தொடர்பு,  மற்றும் உலக, நாட்டு நடப்பு பற்றிய ஆற் றலை பற்றிய இந்த மதிப் பீட்டை  வீபாக்ஸ் நிறு வனம் மேற்கொண்டது.
முதல் பத்து மாநிலங் களின் பட்டியலில் குஜ ராத் இடம் பெறவில்லை. இது தான் மோடியின் ஆட்சியில் குஜராத் இளைஞர்கள் வளர்த்துக் கொண்ட திறமை, ஆற்றல் போலும். இதைத் தான் இளைஞர்களுக்கான கனவு என்று மோடி கூறு கிறாரோ!
இதன் பொருள் என்ன வென்றால், தகுதி மிகுந்த இளைஞர்கள் என்று நாம் கருதிக் கொண்டிருப்பவர் களில் மூன்றில் இரண்டு பகுதியினர் நியமனம் பெற தகுதி பெற்றவர்களாக இல்லை என்பது சிஅய்அய், மக்கள் பலம் மற்றும் வீல் பாக்ஸ் தயாரித்து வெளி யிட்ட 2014 தேசிய ஆற்றல் அறிக்கையில் சுட்டிக்காட் டப்பட்டு,  நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக் காக முக்கியமான துறை களில் கூடுதல் வேலை வாய்ப் புகளை உருவாக்குவது மற் றும் அவற்றில் நியமிப்ப தற்கான சரியான ஆற்றலும் தகுதிகளும் படைத்த இளைஞர்களை உருவாக் குவது பற்றி நாம் உடனடி கவனம் செலுத்துவது மிக வும் அவசியமானது என் பதேயாகும்.
பணி நியமனம் பெறத் தகுதியான மாணவர்கள் அதிக அளவில் உள்ள முதல் பத்து இந்திய நகரங்களின் பட்டியலில்  அஜ்னலா, தாரி வால்,   அகோடா, ஃபதேகர், புதுடில்லி, கோயமுத்தூர் மற்றும் மதுரை ஆகிய நக ரங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் பணி நியமனம் பெறுவதற்கான ஆற்றல் உள்ள இளைஞர் கள் மருந்தியல் துறையிலும் அதனைத் தொடர்ந்து, பொறியியல், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல், மேலாண்மை ஆகிய துறைகளிலும் இருப் பதாகவும் இந்த ஆய்வில் கண்டறி யப்பட்டுள்ளது.
அடுத்து மத்தியில் ஆட்சிக்கு வரப்போகும் அரசின் தலையாய செயல் திட்டமே தகுதி மிகுந்த பட்டதாரி இளைஞர்களை யும், அவர்களை நிய மிப்பதற்கான கூடுதல் பணி யிடங்களையும் உருவாக் குவதுதான் என்று வீல் பாக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவ லர் நிர்மல் சிங் கூறுகிறார்.
பலே, பலே, பெண்கள்!
இந்த சோதனை மேற் கொள்ளப்பட்ட பெண் களில் 42 விழுக்காட்டினர் நியமனம் பெறத் தகுதி படைத்தவர்களாக இருக் கும் நிலையில், 30 விழுக் காட்டு ஆண்கள் மட் டுமே நியமனத் தகுதி பெற்றவர் களாக இருக்கின்றனர் என்பதையும் இந்த மதிப் பீடு காட்டுகிறது. தகுதியும் ஆற்றலும் படைத்த பெண்கள் இந்த அளவுக்கு இருக்கும் நிலையில், தங் கள் நிறுவனப் பணிகளில் பெண்களை அதிக எண் ணிக்கையில் நியமனம் செய்து பெண் பணியாளர்களின் சதவிகிதத்தை உயர்த்துவ தற்கான ஒரு மாபெரும் வாய்ப்பு அனைத்து நிறு வனங்களுக்கும் கிடைத் துள்ளது என்று இந்த ஆய் வறிக்கை தெரிவிக்கிறது.
இச்சோதனையில் ஆங் கில மொழியில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற மாணவர் கள் அதிக அளவில் இடம் பெற்று, ராஜஸ்தான், ஆந்தி ரப்பிரதேசம், அரியானா, உத்தர காண்ட், பஞ்சாப், கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்கள்  முதல் இடங் களில் உள்ளன. இதே போல கணித ஆற்றலும், தர்க்கவாத ஆற்றலும் நிறைந்த மாணவர்கள் அதிக அளவில் இடம் பெற்று ராஜஸ்தான், தமிழ் நாடு, உத்தரப் பிர தேசம், டில்லி, அரியானா, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங் கள் முதல் இடங் களில் உள்ளன. இந்த வகையில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்கள் இருந்த நகரங்களில் புது டில்லி, வடமதுரை, கோயம்புத்தூர், காஜியா பாத், சென்னை, ஈரோடு, பெங்களூரு, மற் றும் ஆக்ரா போன்றவை முதல் இடங்களில் உள்ளன.
பணி நியமனம் பெறுவதற் கான கணினி பொறியியலில் உயர்தகுதி படைத்த மாண வர்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ள மாநிலங்களில் ஒன்றாக புதுச்சேரி உருவாகி யுள்ளது. ராஜஸ்தான், பஞ்சாப், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, உத்தரப் பிரதேசம், கேரளா, ஹரியானா மற்றும் டில்லி ஆகிய பத்து மாநிலங் கள் கணினி திறன் பற்றிய இத் தகுதி சோதனையில் முதல் பத்து இடங்களைப் பெற் றுள்ளன.
பணி சந்தையில், பணி நியமனம் செய்யப்படு வதற்கான தகுதியும், திறமை யும்  படைத்தவர்களை உரு வாக்குவதற்குத் தேவையான தரம் வாய்ந்த கல்வி முறையை உருவாக்கி, மாண வர்களின் ஆற்றல்களை மேம்படுத்தும் ஒரு மாபெரும் சவாலை எதிர் கொள்ள வேண்டிய கட்டாய நிலையில் நமது அரசு இன்று உள்ளது. ஆண்டுதோறும் 120 லட்சம் இளைஞர்கள் பணி நியமனச் சந்தையில் புதிது புதிதாக சேர்வதால், பணி நியமனம் பெறுவோர் மற்றும் பெறாதோருக்கு இடையே உள்ள இடை வெளியை நிரப்புவதற்கு மாபெரும் முயற்சிகள் மேற் கொள்ளப்பட வேண்டும் என்று வல்லுநர்கள் தெரிவிக் கின்றனர்.  படிக்கும் மாண வர்கள் அனைவருமே மருத்துவர்களாகவும், பொறி யாளர்களாகவும் ஆகிவிட முடியாது என்று தெரிவிக்கும் டீம்லீஸ் என்னும் பணி நியமன நிறுவனத்தின் மூத்த உதவித் தலைவர் ரிதுபர்ணா சக்ரவர்த்தி, பணிநியமனக் கண்ணோட்டத்தில் தீவிர மாற்றங்கள் ஏற்பட வேண் டும் என்று வலியுறுத்து கிறார். பணி நியமனம் செய்யப்படுவர்களுக்கும், செய்பவர் களுக்கும் கவர்ச்சி கரமாக இருக்குமாறு பணி நியமன பயிற்சி சட்டத்தை அடுத்து மத்தியில் ஆட்சிக்கு வரும் அரசு மாற்றியமைக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். பணி நியமனச் சந்தையின் தேவைக்கு ஏற்ற வாறு அது இருக்கவேண் டும் என்று அவர் வலி யுறுத்துகிறார்.
நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா,  30.1.-2014 (சுரோஜித் குப்தா)
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

viduthalai.in

கருத்துகள் இல்லை: