வியாழன், 13 பிப்ரவரி, 2014

ஜெர்மனியில் இந்திய வம்சாவளி எம்.பி. வீட்டில் குழந்தைகள் ஆபாச பட அதிரடி சோதனை

ஜெர்மனி நாட்டில் சர்வதேச அளவில் குழந்தைகள் ஆபாச பட குழு இயங்கி வருவதாக போலீசுக்கு தகவல்கள் கிடைத்தன். இது தொடர்பாக போலீசார் நடத்திய புலனாய்வில், குழந்தைகள் ஆபாச பட குழுவில் இந்தியரும், ஜெர்மனி எம்.பி.யுமான செபாஸ்டியன் இடாத்தியின் (வயது 44) பெயரும், அவரது இணையதள ஐ.பி. முகவரியும் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து நீன்பர்க், ஸ்டெட்தாகன் நகர்களில் உள்ள அவரது அலுவலகங்கள், ரேபர்க்கில் உள்ள அவரது வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் சிக்கியது என்ன என்பது குறித்து தகவல் ஏதும் இல்லை. விசாரணையின் ஒரு அங்கமாகத்தான் இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் கூறின.
அதே நேரத்தில் தன் மீதான புகாரை செபாஸ்டியன் இடாத்தி மறுத்துள்ளார். இது யூகத்தின் அடிப்படையிலான தகவல் என அவர் கூறினார். தனது உடல் நிலையை காரணம் காட்டி செபாஸ்டியன் இடாத்தி 15 ஆண்டுகள் வகித்து வந்த பண்டேஸ்டாக் தொகுதி எம்.பி. பதவியை இப்போது ராஜினாமா செய்துள்ளார். இவர் கேரளாவில் இருந்து ஜெர்மனிக்கு சென்று குடியேறிய தந்தைக்கும், ஜெர்மனி தாயாருக்கும் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது maalaimalar.com

கருத்துகள் இல்லை: