வியாழன், 13 பிப்ரவரி, 2014

தி.மு.க., - காங்., - தே.மு.தி.க., கூட்டணி பேச்சுவார்த்தைகள் துவங்கி உள்ளன.

விஜயகாந்தின் தே.மு.தி.க., யார் பக்கம் சாயும் என்ற கேள்விக்கு, விடை தெரியாத நிலையில், தமிழக அரசியலில், திடீர் திருப்பமாக, தி.மு.க., - காங்., - தே.மு.தி.க., கூட்டணி அமைக்க, பேச்சுவார்த்தைகள் துவங்கி உள்ளன.

மேலும், தே.மு.தி.க.,வின் எதிர்பார்ப்பை, காங்கிரசால் மட்டுமே நிறைவேற்ற முடியும் எனக் கூறப்படுவதால், இரு கட்சிகளும் கூட்டு சேர்வதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. டில்லி காங்., தலைவர்கள் குலாம் நபி ஆசாத், அகமது படேல், முகுல் வாஸ்னிக் ஆகியோர், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துடன், தொலைபேசியில் நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.  தளபதியில் சொல் அம்பலம் ஏறாது போல இருக்கிறது. கனிதான் அடுத்த திமுக தலைவர்?
அதன்படி, காங்., மேலிட அழைப்பை ஏற்று, இன்றிரவு, தன் கட்சி எம்.எல்.ஏ.,க்களுடன் விஜயகாந்த் டில்லி செல்கிறார். டில்லியில், பிரதமர் மன்மோகன் சிங்கை, அவர்கள் சந்தித்து, கோரிக்கை மனு கொடுக்க திட்டமிட்டு உள்ளனர். அதன்பின், காங்., துணைத் தலைவர் ராகுலை, விஜயகாந்த் தனியாக சந்தித்துப் பேச உள்ளார். இந்த சந்திப்புக்கு பின், இரு கட்சிகளுக்கும் இடையில், உறவு மலர்வது நிச்சயம் என, காங்., வட்டாரம் நம்பிக்கை தெரிவிக்கிறது. இதற்கிடையில், விஜயகாந்தை, மத்திய அமைச்சர், வாசன் நேற்று திடீரென சந்தித்துப் பேசியுள்ளார். தே.மு.தி.க.,வை கூட்டணியில் சேர்த்த பின், தி.மு.க.,வுடன் பேச்சு நடத்த, காங்., தலைமை திட்டமிட்டு உள்ளது. தி.மு.க.,வையும் இணைத்தால் தான், கூட்டணி பலம் பெறும் என்பதால், அதற்கான முயற்சிகளை, காங்., மேலிடம் துவங்கியுள்ளது.

இந்த சூழ்நிலையில், காங்., தலைவர் சோனியாவை, டில்லி பார்லி., வளாகத்தில் உள்ள அலுவலகத்தில், நேற்று காலை 11:00 மணிக்கு, தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது, காங்கிரசுடன் மீண்டும் கூட்டு சேர, 'இலங்கை தமிழர் பிரச்னையில், இலங்கைக்கு எதிராக, ஐ.நா., சாபையில், இந்திய தீர்மானம் கொண்டு வர வேண்டும்' என்பது உட்பட, சில நிபந்தனைகள், தி.மு.க., தரப்பில் முன்வைக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இதே கோரிக்கையை, சில நாட்களுக்கு முன், ராகுலை சந்தித்துப் பேசிய, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர், திருமாவளவனும் முன்வைத்தார் என்பது, குறிப்பிடத்தக்கது.
- நமது சிறப்பு நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: