ஞாயிறு, 1 ஜூன், 2014

தெலுங்கான நாளை உதயம் ! பங்கு பிரிப்பதில் சீமாந்த்ராவுடன் இழுபறி ! எங்கு போய் நிற்குமோ ?

நாட்டின், 29வது மாநிலமாக, 'தெலுங்கானா' நாளை
உதயமாக உள்ள
நிலையில், சீமாந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னைகளில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது. கிராமங்கள் இணைப்பு, மின்சாரம், நீர் ஆதாரம் உள்ளிட்ட பல பிரச்னைகளில் இன்னும் முழுத் தீர்வு காணப்படாததால், மாநிலப் பிரிவினைக்குப் பின்னும், இரு மாநிலங்களிடையே சுமூகமான நிலை ஏற்படுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.ஆந்திராவை பிரித்து, தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்ற தெலுங்கானா பகுதி மக்களின் நீண்ட நாள் கனவு, நாளை நனவாக உள்ளது. பல ஆண்டுகளாக, தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த, டி.ஆர்.எஸ்., தலைவர் சந்திரசேகர ராவ், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதன் மூலம், மாநிலத்தின் முதல் முதல்வராக நாளை பொறுப்பேற்க உள்ளார். தி்ருப்பதி்யையும் இரண்டாக பிரிப்பாங்களா மேல்தி்ருப்பதி் ஆந்தி்ராவுக்கு கீழ்தி்ருப்பதி் தெலுங்கானாவுக்கு என்று
தற்போது, ஒருங்கிணைந்த ஆந்திராவின் தலைநகராக உள்ள ஐதராபாத் நகரம், அடுத்த, 10 ஆண்டுகளுக்கு சீமாந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களின் பொது தலைநகராக செயல்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. 

நீண்ட போராட்டங்கள், பல உயிர் தியாகங்கள், மறியல்களை கடந்து, தெலுங்கானா மாநிலம் நாளை உதயமாகிறது. எனினும், இரு மாநிலங்களிடையேயான பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படாததால் இன்னமும் குழப்பம் நீடிக்கிறது.தெலுங்கானா பகுதியில் உள்ள சில கிராமங்களை, சீமாந்திராவுடன் இணைக்கப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இப்பகுதிகளில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிப்பதால், இது அப்பகுதி மக்களின் உணர்வு ரீதியான பிரச்னையாக கருதப்படுகிறது. இதனால், அக்கிராமங்களை சீமாந்திராவுடன் இணைக்க, தெலுங்கானா பகுதி மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேபோல், இரு மாநிலங்களுக்கு தேவையான குடிநீர், மின்சாரம் போன்ற அத்தியாவசிய பொருட்களை பங்கிடுவதிலும், உடன்பாடு எட்டப்படாததால் குழப்பம் நீடிக்கிறது. இரு மாநில அரசு ஊழியர்கள், மாநிலங்களின் வெவ்வேறு பகுதிகளில் பணியாற்றுவதால், அந்தந்தப் பகுதிகளை சேர்ந்தவர்கள், உடனடியாக குடி பெயர்வதில் சிக்கல்ஏற்பட்டுள்ளது.எனவே, நாளை புதிய மாநிலம் உதயமானாலும், அடிப்படை தேவைகளை பகிர்ந்து கொள்ளுதல், அரசு ஊழியர்களின் பணியிடப் பிரச்னை, எல்லை பிரிப்பு போன்ற விஷயங்களில், பல ஆண்டுகளுக்கு குழப்பம் நீடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

பிரச்னைகள் என்ன?



*தெலுங்கானா பகுதியில் உள்ள, 211 கிராமங்களை சீமாந்திராவுடன் இணைக்கப் போவதாக, மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இதற்கு, தெலுங்கானா மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
*இரு மாநிலங்களில், பாசனத்திற்கு தேவையான நீர் பங்கீட்டில் இன்னும் உடன்பாடு எட்டப்படாத தால், அதிலும் சிக்கல் நீடிக்கிறது.
*இரு மாநிலங்களுக்கு தேவையான மின்சாரம் வழங்குவது, மக்கள் தொகை அடிப்படையில் முடிவு செய்யப்பட்டுள்ளதால், சீமாந்திரா பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
*தனி மாநிலம் உதயமானதும், தெலுங்கானா பகுதியில் பணியாற்றும் சீமாந்திரா அரசு ஊழியர்கள், உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும் என, டி.ஆர்.எஸ்., தலைவர் சந்திரசேகர ராவ் தெரிவித்து உள்ளார்.
*ஐதராபாத்தை விட்டு செல்ல மனமில்லாத ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், போலிஇருப்பிடச் சான்று தயாரிப்பதில்மும்முரம் காட்டி வருகின்றனர்.

அனுமதிக்க முடியாது:
சீனிவாச கவுட்எம்.எல்.ஏ., - டி.ஆர்.எஸ்.,:
தெலுங்கானா பகுதியில் வசிக்கும்,சீமாந்திராவை சேர்ந்த, 13,700 அரசு ஊழியர்கள், போலி இருப்பிடச் சான்று தயாரித்து, ஐதராபாத்தில் நிரந்தரமாக வசிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன; இது கண்டிக்கத்தக்கது. இதனால், தெலுங்கானா மக்களின் நலன் பாதிக்கப்படுவதை, ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

தவறான நடைமுறை:
சந்திரபாபு நாயுடுதலைவர் - தெலுங்கு தேசம் கட்சி:
காங்., தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மக்கள்தொகை அடிப்படையில், இரு மாநிலங்களுக்கு தேவையான சொத்துகளை பிரித்தளித்துள்ளனர்; இது வரவேற்கத்தக்கது. மின்சாரப் பங்கீட்டில், இதே நடைமுறை பின்பற்றப்படுவது தவறு.தெலுங்கானாவை விட, சீமாந்திராவில் மின் நுகர்வு அதிகம். அந்த அடிப்படையில், மின்சார பங்கீடு அமைய வேண்டும்.

- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை: