புதன், 4 ஜூன், 2014

90 வங்காளதேச குடும்பங்கள் திரிபுரா மாநிலத்திற்குள் வருகை !

வங்காளதேசத்தில் இருந்து வேலியற்ற எல்லை வழியாக திரிபுரா மாநிலத்திற்கு 90 குடும்பங்கள் ஊடுருவி உள்ளன. வங்காளதேசத்தின் கராச்சேரி மாவட்டத்தைச் சேர்ந்த இந்த குடும்பத்தினர் அனைவரும் திரிபுராவின் தலாய் மாவட்டம் துய்சக்மாவில் கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர். இதனை உறுதி செய்துள்ள மாவட்ட கலெக்டர் மிலித் ராம்டேக் துய்சக்மாவில் முகாமிட்டு, ஊடுருவியிருக்கும் வங்காளதேச மக்களைப் பற்றிய தகவல்களை சேகரித்து வருகிறார். < இதையொட்டி எல்லைப் பாதுகாப்பு படை இன்று மாலை மயாங்கில் வங்காளதேச எல்லைப் பாதுகாப்பு படையினருடன் கொடி சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர். பிரச்சினையை தீர்ப்பதற்காக வங்காள தேசத்தில் இருந்து விங் கமாண்டர் வருகிறார். தற்போது ஊடுருவியுள்ள அனைவரையும் வங்காளதேசத்திற்கு திருப்பி அனுப்பும் நம்பிக்கையில் இருக்கிறோம் என்றும் கலெக்டர் கூறினார்.


வங்காளதேசத்தவர்கள் ஊடுருவலைத் தொடர்ந்து எல்லை வேலி இல்லாத கனடசேரா சப்டிவிஷனில் உயர் போலீஸ் அதிகாரிகளும் பாதுகாப்பு படை அதிகாரிகளும் முகாமிட்டுள்ளனர்.

ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் வங்காளதேச எல்லைப் பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்படும் சண்டை காரணமாக, சிட்டகாங் மலைப்பகுதியில் பதட்டம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அங்குள்ள மக்கள் இந்திய பகுதிக்குள் வந்து தங்குவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் வேலியற்ற எல்லைப் பகுதிகளில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் 80 சதவீதம் வேலி அமைக்கப்பட்டுள்ளது. திரிபுராவின் கிழக்கு எல்லையில் சில பகுதிகளில் மட்டும் வேலி இல்லை. maalaimalar.com

கருத்துகள் இல்லை: