செவ்வாய், 3 ஜூன், 2014

விபத்தில் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மரணம்!!

டெல்லி: சாலை விபத்தில் சிக்கிய மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரான கோபிநாத் முண்டே சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான கோபிநாத் முண்டே, மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார். டெல்லி விமான நிலையம் அருகே இன்று காலை அவர் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த கோபிநாத் முண்டே மிகவும் ஆபத்தான நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அப்போது திடீரென கோபிநாத் முண்டேவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இருப்பினும் மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்க போராடினர். ஆனால் சிகிச்சை பலனின்றி கோபிநாத் முண்டே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் உறுதிப்படுத்தினார். கோபிநாத் முண்டே உடல் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு நாளை அடக்கப்படும் என்று மத்திய அமைச்சரான நிதின் கட்காரி கூறியுள்ளார்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: