இந்தியாவின் முதல் சலனப் பதிவாக்க தொழில்நுட்பத்தில் (மோஷன் கேப்சர்)
‘என் நண்பன்
கிருஷ்ணமூர்த்தியின் திறமையை பாராட்டுவது நானே என் முதுகை
தட்டிக்கொள்வதுபோல’ என்று என் அம்மாவிடம் அடிக்கடி சொல்வார் நாகேஷ்.
நாடகம், சினிமா என்று நாகேஷ் பிஸியாகத் தொடங்கியபோது “ரயிலில் ஏறும்போது
நான் இன்ஜின்ல ஏறிட்டேன். கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட என் நண்பர்கள் எல்லாம் 4
பெட்டி பின்னாடி ஏறிட்டாங்க’’ என்று நண்பர்கள் கூடி அரட்டை அடிக்கும்போது
சொல்லி சிரிப்பார். எதார்த்தம், அன்பு இதெல்லாம் நாகேஷிடம்
கொட்டிக்கிடக்கும்.
உருவாக்கப்பட்டுள்ள ‘கோச்சடையான்’ திரைப்படத்தில் சம்புமித்ரர் கதாபாத்திரத்தில் நடிகர் நாகேஷை வடிவமைத் திருக்கிறார்கள். ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இந்த கதாபாத்திரத்துக்கு நாகேஷின் 30 ஆண்டுகால நண்பர் கிருஷ்ணமூர்த்தி தன் குரலால் உயிரூட்டியிருக்கிறார். தங்களது ‘நட்புக்காலம்’ பற்றி உற்சாகமாக பேசுகிறார், ‘நாகேஷ்’ கிருஷ்ணமூர்த்தி. நாகேஷ் நடித்த ‘மின்னலே’, ‘ரிதம்’, ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘காதல் கொண்டேன்’, ‘தசாவதாரம்’ படங்களில் நான்தான் அவருக்கு டப்பிங் கொடுத்திருப் பேன்.
பெரும்பாலும் என்கூடவே இருந்து நான் டப்பிங் கொடுப்பதை ரசித்து பார்த்துக்கொண்டிருப்பார். அவர் நடித்த தெலுங்கு படங்களின் தமிழ் டப்பிங் முழுக்க நான்தான். நாங்கள் இருவரும் நெருக்கமானது மேடை நாடங்களில்தான். என் அம்மா கையால் சாப்பிடுவதை நாகேஷ் ரொம்பவே விரும்புவார்.

நாகேஷிடம் சண்டை பிடிப்பேன்
நான் சுங்கதுறையில் பணியாற்றியவன். சினிமாவை நம்பி வேலையை விட
மனமில்லாமலேயே முழுக்க சினிமாவுக்குள் குதிக்காமல் இருந்து விட்டேன்.
நானும் நாகேஷும் மௌலியோட நாடகங்களில்தான் அதிகம் சந்திக்கும் சூழல்
உண்டாகும். அப்படி யான சூழலில் தான் எங்கள் முதல் சந்திப் பும் நடந்தது.
படத்தில் ஒப்பந்தமாகும்போதே அந்த படக்கம்பெனிக்கு போன் செய்து என்னை வைத்து
டப்பிங்கை முடித்துவிட சொல்லிவிடுவார், நாகேஷ்.
‘காதல்கொண்டேன்’ படத்துக் காக டப்பிங் கூப்பிட்டபோது, ‘போப்பா
நடிக்குறதுக்கு லட்ச லட்சமா பணம் கொடுக்குறாங்க. டப்பிங் பேசும் எனக்கு
என்ன பெரிதாக பணம் கொடுக்குறாங்க’ என்று நாகேஷிடம் சண்டை போட்டேன்.
அதைக்கூட நாகேஷ் ரசிக்கத்தான் செய்தார். ‘மின்னலே’ படம் எடுத்தபோது
புகைப்பழக்கத்தால் தொடர்ச்சியாக இருமல் தொந்தரவுக்கு ஆளாகி ‘என்னால ஒரு
இடத்தில் கூட டப்பிங் கொடுக்க முடியாது. கிருஷ்ணமூர்த்தி எங்க இருக்கான்னு
புடிங்க’ என்று அக்கறை
யோட சொன்ன அவரும், நானும் கிட்டத்தட்ட 30 ஆண்டுகால நண்பர்கள். ரெண்டு
பேருமே ‘போடா, வாடா’ என்று பேசிக்கொள்ளும் அளவுக்கு நண்பர்கள். இயற்கையே
எங்க ரெண்டு பேரோட குரலையும் ஒரே மாதிரி அமைத்துக் கொடுத்து நண்பர்களாகவும்
ஆக்கியது நான் செய்த பாக்கியம்.
‘பிரமாதம்டா’ கிருஷ்ணா
‘தசாவதாரம்’ படத்தில் நாகேஷ் நடித்தபோது அவரது உடல் அவ்வளவாக
ஒத்துழைக்கவில்லை. அந்தப் படத்துக்காக டப்பிங் கொடுத்த அனுபவம் ரொம்பவே
சுவாரஸ்யம்.
நாகேஷ் படத்தைப் பார்த்துவிட்டு ‘பிரமாதம்டா கிருஷ்ணா’ என்று பாராட்டி
னார். இன்று என்னைப் பாராட்ட அவர் இல்லாமல் போனது பெரும் சோகம்.
மேடை நாடகங்களில் நடித்து வந்த நான் ‘பாபு’ படத்தில்தான் முதன் முதலாக
சினிமாவுக்கு வந்தேன். கமல் நடித்த ‘மீண்டும் கோகிலா’ படத்தில் தேவிக்கு
அண்ணனாக நடித்திருப்பேன். அந்த நேரத்தில் இருந்தே கமல் என் நண்பர்.
ரஜினியின் பாராட்டு
‘கோச்சடையான்’ படத்திற்கு டப்பிங் கொடுத்தது ரொம்பவே திரில்லான அனுபவம்.
காட்சி பின்னணி இல்லாமல். இந்த இடத்துக்கு நாகேஷ் இப்படித்தான்
வெளிப்படுத்தி இருப்பார் என்று ஒவ்வொரு தடவையும் பேசிப் பேசி
கே.எஸ்.ரவிக்குமாரிடம் காட்டுவேன். இந்த படத்துக்கு டப்பிங் கொடுப்பது
ரொம்பவே கஷ்டமாக இருந்தது. ஒவ்வொன்றையும் வீடியோ கேமராவில் பதிவு செய்து
கொண்டுபோய் சௌந் தர்யா அவங்க அப்பா ரஜினியிடம் போட்டு காமிப்பாங்க. அவர்
மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்ததாக வந்து சௌந்தர்யாவும் ரவிக்குமாரும்
சொல்லியிருக்காங்க. tamil.thehindu.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக