செவ்வாய், 3 ஜூன், 2014

சென்னை : பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொள்ளை அடித்தவன் பிடிபட்டான்

மதுரவாயலை சேர்ந்தவர் சரோஜினி. என்ஜினீயரான இவர் எம்.இ.
படித்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரவாயல் போலீசில் புகார் செய்தார்.
அதில் இணைய தள திருமண தகவல் மையம் மூலம் திருக்கோவிலூரை அடுத்த அத்திப்பாக்கத்தை சேர்ந்த அந்தோணி குரூஸ் அறிமுகம் ஆனார். அவர் தான் அனாதை என்றும் சொந்த ஊரில் பார்சல் சர்வீஸ் நடத்துவதாகவும் கூறினார்.
எங்கள் இருவருக்கும் திருவேற்காட்டில் உள்ள கோவிலில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 6 நாட்கள் மட்டும் இருந்தார். சொந்த ஊரில் வேலை இருப்பதாக கூறிச் சென்றவர் பின்னர் திரும்பி வரவில்லை. அவர் மேலும் பல பெண்களை திருமணம் செய்து இருப்பதாக தெரிகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவனது முகமே இவன் கேடி என்பதை காட்டுகிறது ஏன்தான் பெண்கள் ஏமாறுகிறார்கள் ?

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.
துணை கமிஷனர் சேவியர் தன்ராஜ், உதவி கமிஷனர் ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் திருமங்கலம் மகளிர் இன்ஸ்பெக்டர் பிரான்வின் டேனிசபின் விசாரணை நடத்தினார்.
அப்போது அந்தோணி குரூஸ் கல்யாண மன்னனாக மேலும் 3 பெண்களை திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது.
கடந்த 1997–ம் ஆண்டு அந்தோணி குரூஸ் அத்தை மகளான சகாயமேரியை திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 மகள்களும் உள்ளனர். 2003–ம் ஆண்டு சகாயமேரி தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து 2007–ம் ஆண்டு சேலம், சூரமங்கலத்தை சேர்ந்த எம்.ஏ.எம்.எட் முடித்துள்ள ஆசிரியை உத்தரமேரியை மணந்தார். அவர் மணமகன் தேவை என செய்திதாளில் வெளியிட்ட விளம்பரத்தை கவனித்த அந்தோணி தனது மாயாஜால பேச்சால் வீழ்த்தி இருக்கிறார்.
உத்தரமேரியிடம் 7 மாதம் குடும்பம் நடத்திய அவர் கிடைத்தவரை சுருட்டி விட்டு 2013–ம் ஆண்டு கோவையை சேர்ந்த விதவை பெண் ஹேமாவதியை வீழ்த்தினார். அவரிடம் ரூ.4 லட்சம் வரை வசூல் செய்த அந்தோணி அங்கிருந்து ஓட்டம் பிடித்து என்ஜினீயர் சரோஜினியை மணந்திருப்பது விசாரணையில் தெரிந்தது.
இதையடுத்து அந்தோணி குரூசை போலீசார் கைது செய்தனர். திருமண மோசடிக்கு வேறு யாரேனும் அவருக்கு உதவினார்களா என்று விசாரணை நடந்து வருகிறது.
கல்யாண மன்னன் அந்தோணி குரூஸ் பிளஸ்–1 வரை மட்டுமே படித்துள்ளார். தான் வீழ்த்த முடிவு செய்த பெண்களிடம் பி.காம். படித்து இருப்பதாகவும், மாதம் ரூ.50 ஆயிரம் வரை பார்சர் சர்வீஸ் தொழில் லாபம் கிடைத்து இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
திருமணத் தடையால் நீண்ட நாட்கள் காத்திருக்கும் பெண்களையே அந்தோணி குறிவைத்து பேசி மணந்திருப்பது தெரிய வந்தது. அவரிடம் ஏமாந்த பெண்களுக்கு இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மதுரவாயலை சேர்ந்தவர் சரோஜினி. என்ஜினீயரான இவர் எம்.இ. படித்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரவாயல் போலீசில் புகார் செய்தார்.
அதில் இணைய தள திருமண தகவல் மையம் மூலம் திருக்கோவிலூரை அடுத்த அத்திப்பாக்கத்தை சேர்ந்த அந்தோணி குரூஸ் அறிமுகம் ஆனார். அவர் தான் அனாதை என்றும் சொந்த ஊரில் பார்சல் சர்வீஸ் நடத்துவதாகவும் கூறினார்.
எங்கள் இருவருக்கும் திருவேற்காட்டில் உள்ள கோவிலில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 6 நாட்கள் மட்டும் இருந்தார். சொந்த ஊரில் வேலை இருப்பதாக கூறிச் சென்றவர் பின்னர் திரும்பி வரவில்லை. அவர் மேலும் பல பெண்களை திருமணம் செய்து இருப்பதாக தெரிகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தார்.
துணை கமிஷனர் சேவியர் தன்ராஜ், உதவி கமிஷனர் ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் திருமங்கலம் மகளிர் இன்ஸ்பெக்டர் பிரான்வின் டேனிசபின் விசாரணை நடத்தினார்.
அப்போது அந்தோணி குரூஸ் கல்யாண மன்னனாக மேலும் 3 பெண்களை திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது.
கடந்த 1997–ம் ஆண்டு அந்தோணி குரூஸ் அத்தை மகளான சகாயமேரியை திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 மகள்களும் உள்ளனர். 2003–ம் ஆண்டு சகாயமேரி தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து 2007–ம் ஆண்டு சேலம், சூரமங்கலத்தை சேர்ந்த எம்.ஏ.எம்.எட் முடித்துள்ள ஆசிரியை உத்தரமேரியை மணந்தார். அவர் மணமகன் தேவை என செய்திதாளில் வெளியிட்ட விளம்பரத்தை கவனித்த அந்தோணி தனது மாயாஜால பேச்சால் வீழ்த்தி இருக்கிறார்.
உத்தரமேரியிடம் 7 மாதம் குடும்பம் நடத்திய அவர் கிடைத்தவரை சுருட்டி விட்டு 2013–ம் ஆண்டு கோவையை சேர்ந்த விதவை பெண் ஹேமாவதியை வீழ்த்தினார். அவரிடம் ரூ.4 லட்சம் வரை வசூல் செய்த அந்தோணி அங்கிருந்து ஓட்டம் பிடித்து என்ஜினீயர் சரோஜினியை மணந்திருப்பது விசாரணையில் தெரிந்தது.
இதையடுத்து அந்தோணி குரூசை போலீசார் கைது செய்தனர். திருமண மோசடிக்கு வேறு யாரேனும் அவருக்கு உதவினார்களா என்று விசாரணை நடந்து வருகிறது.
கல்யாண மன்னன் அந்தோணி குரூஸ் பிளஸ்–1 வரை மட்டுமே படித்துள்ளார். தான் வீழ்த்த முடிவு செய்த பெண்களிடம் பி.காம். படித்து இருப்பதாகவும், மாதம் ரூ.50 ஆயிரம் வரை பார்சர் சர்வீஸ் தொழில் லாபம் கிடைத்து இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
திருமணத் தடையால் நீண்ட நாட்கள் காத்திருக்கும் பெண்களையே அந்தோணி குறிவைத்து பேசி மணந்திருப்பது தெரிய வந்தது. அவரிடம் ஏமாந்த பெண்களுக்கு இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.maalaimalar.com

கருத்துகள் இல்லை: