வியாழன், 5 ஜூன், 2014

அழகிரியை தேடி மா.செ.,க்கள் ஓடினால்...: கருணாநிதியை கட்டிப்போடும் ஸ்டாலின்

தேர்தல் தோல்விக்கு காரணமான, மாவட்டச் செயலர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அவர்கள், அழகிரி பக்கம் சாயும் ஆபத்து ஏற்பட்டு விடும்' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கருதுவதாக தெரியவந்துள்ளது.இதையடுத்து, அவர்களை காப்பாற்றும் விதமாக, 'மாவட்ட செயலர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், பொருளாளர் பதவியில் நான் நீடிக்க மாட்டேன்' என்று கருணாநிதியிடம், ஸ்டாலின் கூறியுள்ளதாக தெரிகிறது.இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
உயர்நிலை செயல் திட்டக் குழு கூடுவதற்கு முன், சென்னை, செனடாப் சாலையில் உள்ள ஸ்டாலின் வீட்டில், மே, 30ம் தேதி ஆலோசனை நடந்துள்ளது. அதில், ஸ்டாலின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் மாவட்ட செயலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என, முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  ஸ்டாலினும் ராகுலும் பேசி வச்சு சதி பண்றாய்ங்களோ ? இரு ஜோக்கர்களுக்கும் ஒரு ஒற்றுமையும் உண்டு சகோதரர் / சகோதரி தலைமை ஏற்க வருவதை இருவருமே விரும்ப மாட்டாய்ங்க .இனி அவிங்களுக்கு நிரந்தர மூன்றாம் இடம்தாய்ன் ! ஆனா அறக்கட்டளை மட்டும் ஸ்டாலின் ஸ்டாலின் ஸ்டாலின் ? விளங்கிடும் ?
தேர்தல் தோல்விக்கு காரணமாக இருந்த மாவட்ட செயலர்களை, களையெடுக்க வேண்டும் என, கருணாநிதி திட்டமிட்டிருந்தார்.குறிப்பாக, அ.தி.மு.க.,விலிருந்து வந்து, தி.மு.க.,வில் ஐக்கியமாகி, தற்போது ஆதிக்கம் செலுத்தி வரும் பிரமுகர்கள் சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கருணாநிதி முடிவெடுத்தார். இந்த தகவலை, 'மாஜி' அமைச்சர்கள் இருவரிடம் கருணாநிதி கூறியுள்ளார்.அந்த மாஜி அமைச்சர்கள், கருணாநிதி எடுத்துள்ள முடிவை ஸ்டாலினிடம் கூறியதும், அவர் ஆவேசம் அடைந்து, 'அவர்களை எல்லாம் விடுவிக்கும் போது, என்னையும் பொருளாளர் பதவியிலிருந்து விடுவித்து விடுங்கள். இரண்டாவது முறை ராஜினாமா கடிதம் தருகிறேன்' என, கூறியுள்ளார்.இதையடுத்தே, மாவட்ட செயலர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் தீர்மானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட செயலர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அதிருப்தி அடையும் அவர்கள் அனைவரும், அழகிரி அணியில் ஐக்கியமாகி விடுவர். இதனால், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அவர்களை காப்பாற்றுவது தான் ஸ்டாலினுக்கு நல்லது என, அவரது குடும்பத்தினரும, ஆதரவாளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.மாவட்ட செயலர்களை மாற்றுவதற்கு, ஸ்டாலின் முட்டுக்கட்டையாக இருப்பதை தொண்டர்கள் விரும்பவில்லை. இதை எப்படி ஸ்டாலின் சமாளிக்க போகிறார் என்பது தெரியவில்லை.இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது நிருபர் dinamalar.com

கருத்துகள் இல்லை: