வெள்ளி, 6 ஜூன், 2014

பாலியல் பலாத்காரம் சிலநேரங்களில் தவறில்லையாம் ! பாஜாக மந்திரியின் அருள் வாக்கு !

பாலியல் பலாத்காரங்களில் ஈடுபடுவது சில நேரங்களில் சரியானதுதான்: பாஜக மந்திரி கருத்தால் பரபரப்புபாலியல் பலாத்காரங்களில் ஈடுபடுவது சில நேரங்களில் சரியானதுதான் என பாஜக ஆளும் மத்தியப்பிரதேச மாநில உள்துறை அமைச்சர் பாபுலால் கவுர் தெரிவித்துள்ள கருத்தால் மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.உத்திரப்பிதேச மாநிலத்தில் கடந்த மாதம் 14 மற்றும் 15 வயதுடைய இரு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த ஒரு கும்பல், அவர்களை கொன்று தூக்கிலிட்டனர். அதனைத் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை பல தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.இப்படியே உளறி கொட்டிண்டே போங்க சீக்கிரம் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்திடும


இந்தநிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாபுலால் கவுர், பாலியல் பலாத்காரம் ஒரு சமூக குற்றம். அது சில நேரங்களில் சரி, சிலநேரலங்களில தவறு. பாலியல் குற்றவாளிகள் அதனை செய்த பிறகு தான் நமக்கு தெரிய வருகிறது. இதனால் அதனை தடுப்பது கடினம். நமக்கு புகார் வந்த பிறகுதான் நடவடிக்கை எடுக்க முடியும். அகிலேஷ் யாதவ், முலாயம் சிங் யாதவ் இதனை எப்படி தடுக்க முடியும் என்றார்.

அமைச்சர் பொறுப்பில் உள்ள ஒருவரே இப்படி பேசினால் எப்படி சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கும். எனவே அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. nakkheeran .com

கருத்துகள் இல்லை: