நாம் வசிக்கிற பூமியை விட 17 மடங்கு எடையுள்ளதும், இரண்டு மடங்கு
பெரியதுமான ‘கெப்ளர்-10 சி’ என்ற புதிய கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோள், 45 நாளுக்கு ஒரு முறை சூரியனைப்போன்ற ஒரு நட்சத்திரத்தை
சுற்றி வருகிறது. பூமிக்கோளில் இருந்து இது 560 ஒளி ஆண்டுகள் ( ஒரு ஒளி
ஆண்டு என்பது சுமார் 6 டிரில்லியன் மைல் தொலைவு) தொலைவில் உள்ளது. இந்த
புதிய கோளின் சுற்றளவு 18 ஆயிரம் மைல்கள் ஆகும்.
இந்த கோளை கண்டுபிடித்திருப்பது குறித்து ஹார்வர்டு ஸ்மித்சானியன் வானியல் பவுதிக மையத்தை சேர்ந்த ஆராய்ச்சி விஞ்ஞானி சேவியர் னடஸ்கியூ கூறுகையில், “இந்தக் கோளை நாங்கள் கண்டுபிடித்திருப்பது எங்களுக்கு மிகுந்த வியப்பை அளித்துள்ளது” என்றார். மற்றொரு விஞ்ஞானியான டிமிட்டர் சாஸ்செலோவ் கூறும்போது, “ இது அனைத்து பூமிகளின் காட்சில்லா போன்றது. இந்த கோளில் உயிர்வாழ்வதற்கு சாதகமான அம்சங்கள் உள்ளன” என்றார். இந்தக் கோள் தொடர்பான ஆராய்ச்சி தொடர்ந்து நடக்கிறது. maalaimalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக