என்
காதல் வித்தியாசமாக இருக்கும் என்று மனம் திறந்து கூறினார் எனக்கு
அசைவம் என்றால் பிரியம். அதிலும் சிக்கன் விரும்பி சாப்பிடுவேன். ஒருநாள்
விலங்கு பாதுகாப்பு அமைப்பினரின் (பீட்டா) கட்டுரை ஒன்றை படித்தேன்.
அன்றுமுதல் என் மனம் மாறிவிட்டது. என் அம்மாவிடம் சென்று இனிமேல் அசைவ உணவு
செய்ய வேண்டாம். நான் சைவத்துக்கு மாறிவிட்டேன் என்றேன். இப்போதைக்கு
நடிப்பில்தான் முழுகவனம் செலுத்துகிறேன். ஆனால், நான் காதலில்
விழுந்துவிட்டதாக சிலர் கூறுகிறார்கள். யாரோ சொல்வதை நீங்கள் நம்பாதீர்கள்.
கண்ணால் பார்த்தபிறகு நம்புங்கள். என்னைப் பொறுத்த வரை நிச்சயமாக
சொல்கிறேன் எனது காதல் வழக்கமான ஒரு காதலாக இருக்காது. வித்தியாசமாக
இருக்கும்.
ரெஜினா.‘கேடி
பில்லா கில்லாடி ரங்கா‘, ‘அழகிய அசுரா, ‘பஞ்சாமிர்தம் உள்ளிட்ட படங்களில்
நடித்திருப்பவர் ரெஜினா. அவர் கூறியதாவது:நீங்கள் எந்த ஊரை சேர்ந்தவர்
என்று கேட்கிறார்கள்? என்னுடைய அம்மா கர்நாடகாவை சேர்ந்தவர். தந்தை வட
இந்தியர். பாட்டி கோவாவை சேர்ந்த ஆங்கிலோ இண்டியன். தாத்தா ஐயங்கார் பிறகு
கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டார். நான் சென்னையில் பிறந்தேன். இதில் நான்
எந்த ஊரை சேர்ந்தவள் என்று சொல்வதில் எனக்கு குழப்பம் எழுவதுண்டு. tamilmurasu.org/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக