காயிதே மில்லத் 119வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. திருவல்லிக்கேணி வாலாஜா
பெரிய பள்ளி வாசல் வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சியினர், சமுதாய பிரமுகர்கள் பலர் திரண்டு வந்து மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
ஆனால், தமிழக முதல்வர் புறக்கணித்துவிட்டார்.
ஒருவாரத்திற்கு முன்பே தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிகாரிகளை முதல்வர் அலுவலகம் தொடர்பு கொண்டு, காயிதே மில்லத் பிறந்தநாளுக்கு முதல்வர் மரியாதை செலுத்தப்போகிறார். அதற்கான தயாரிப்பு வேலைகளை செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், டெல்லிக்கு சென்று பாஜக தலைவர்களை சந்தித்துவிட்டு வந்த பிறகு காயிதே மில்லத் நினைவு தினத்திற்கு மரியாதை செலுத்துவதை ஜெ., தவிர்த்துவிட்டார்.இதே போல் கடந்த மே- 21ம் தேதி ராஜீவ்காந்தி மறைவு தினத்தையொட்டி மேற்கொள்ளும்தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழியையும் ஜெ., புறக்கணித்துவிட்டார். இப்படி காங்கிரஸ், முஸ்லீம் தலைவர்களை ஜெ., புறக்கணித்ததன் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். இருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகிறார்கள். nakkheeran.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக