செவ்வாய், 3 ஜூன், 2014

144 ? புதிய தமிழகம் கிருஷ்ணசாமி : ஏப்ரல் மாதம் 10ம் தேதி வரையிலும் திமுக கூட்டணிக்கு 20தொகுதிகள் வரை நிச்சயமாக கிடைக்கும் என்ற நிலை இருந்தது.

கலைஞர் தலைமையில் 144 தடை உத்தரவுக்கு
நியாயம் காணவேண்டும்: கிருஷ்ணசாமி பேச்சு :
 ஏப்ரல் மாதம் 10ம் தேதி வரையிலும் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்ற நிலை களத்திலே இருந்து என்று சொன்னால் அது திராவிட முன்னேற்றக்கழகத்தின் வேட்பாளர்கள்தான்.  20தொகுதிகள் வரை நிச்சயமாக கிடைக்கும் என்ற நிலை இருந்தது. 
திமுக தலைவர் கலைஞரின் 91-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.  இதை முன்னிட்டு  ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிறந்தநாள் பொதுக்கூட்டம் இரவு நடைபெற்றது.  திமுக பிரமுகர்கள், தொண்டர்கள் திரண்டு வந்திருந்தனர்.இக்கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேசியபோது,  ‘’ஒரு மாதத்திற்கு முன்பு நடைபெற்ற நாடாளூமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக்கழகத்தின் கீழ் அமையப்பெற்ற கூட்டணியினர் எவரும் வெற்றி பெறவில்லை. 


நடைபெற்ற தேர்தல் அது ஜனநாய பூர்வமாக நடைபெற்ற தேர்தல் அல்ல.  அது மக்கள் அளித்த வெற்றியும் அல்ல.  நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலே நானும் ஒரு வேட்பாளன் என்ற முறையிலே, ஏப்ரல் மாதம் 10ம் தேதி வரையிலும் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்ற நிலை களத்திலே இருந்து என்று சொன்னால் அது திராவிட முன்னேற்றக்கழகத்தின் வேட்பாளர்கள்தான்.  20தொகுதிகள் வரை நிச்சயமாக கிடைக்கும் என்ற நிலை இருந்தது. 

அம்மையார் சென்ற கூட்டங்களில் எல்லாம், கூட்டம் இல்லை.   மக்கள் எழுச்சி இல்லை.  அமைச்சர்கள், வேட்பாளர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் விரட்டியடிக்கப்படுகிறார்கள்    என்று செய்தி வந்த வண்ணம் இருந்தபடி இருந்ததை உளவுத்துறை வாயிலாக கேட்டறிந்து, இரண்டு ஓய்வு பெற்ற அதிகாரிகளை அதிமுகவிற்குள் கொண்டுவந்தார் அம்மையார்.   அதற்கு பிறகுதான் தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் மாற ஆரம்பித்தது. 
காஷ்மீரில் வன்முறை இல்லாத நாள் கிடையாது.  சட்டீஸ்கர், ஜார்கண்ட், பீகார், ஒரிஷா போன்ற மாநிலங்களில் இருக்கக்கூடிய ஆயுதங் தாங்கி நடக்கும் போராட்டங்கள், வடகிழக்கு மாநிலங்களில் ஏறக்குறைய 50 ஆண்டுகளாக போராட்டங்கள்,  இப்படிப்பட்ட எந்த மாநிலத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.  ஆனால், தமிழகத்திலே மட்டும்தான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

தடை உத்தரவைபிறப்பித்து, மக்கள் மத்தியிலே பீதியை உருவாக்கி, எப்படியாவது பிரதமர் கனவை நினைவாக்கிக்கொள்ள வேண்டும். அதற்காக என்ன விலை கொடுத்தாலும் பரவாயில்லை என்று, அனைத்து வாக்காளர்களுக்கும் தேர்தல் அதிகாரிகள் சம்பத் அவர்களும், பிரேம்குமார் அவர்களும் உதவி செய்தார்கள்.  பணப்பட்டுவாடா செய்யப்பட்டது.   வெற்றியை அவர்கள் பறித்துக்கொண்டார்கள்.  அவ்வளவுதான்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் நியாயமான வெற்றி கிடைக்க வேண்டுமென்றால் 144 தடை உத்தரவை நீக்க வேண்டும். அதற்கு விடை காணவேண்டும்.  இந்த 144 தடை உத்தரவுக்கு ஒரு நியாயம் காணவேண்டும்.  அதற்கு அனைத்து கட்சிகளும் புகார் அளிக்க வேண்டும்.  அதற்கு கலைஞர் அவர்களே நீங்கள்தான் தலைமையேற்க வேண்டும்’’ என்று பேசினார்./nakkheeran.in/

கருத்துகள் இல்லை: