சனி, 7 ஜூன், 2014

அந்த 323 தொலைபேசி இணைப்புகளும் தயாநிதி மாறனும் ! விசாரணை ஆரம்பம் !

;தயாநிதி மாறனின், சன் டிவி அலுவலகத்திற்கு முறை கேடாக, அவரது
வீட்டிலிருந்து  323 தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக வழங்கியது தொடர்பாக விசாரணை மீண்டும் கிளறப்படுவது என்று தொடர்ந்து போய்க் கொண்டிருக்கிறது.
இந்த முறைகேடான தொலைபேசி வழக்கு 2008 ஆம் ஆண்டே வெளிச்சத்திற்கு வந்தாலும், காங்கிரஸ் அரசின் தயவால் கிடப்பில் போடப்பட்டிருந்தது  தற்போது மீண்டும் கிளறப்படுகிறது. < இதனையடுத்து, தற்போது, இது தொடர்பாக சன் குழுமத்தின் முன்னாள் துணைத் தலைவர் ஹன்ஸ்ராஜ் சக்ஸேனாவை சிபிஐ தற்போது விசாரிக்கத் துவங்கியிருக்கிறது. இந்த முறைகேடான தொலைபேசி எக்ஸ்சேஞ்சின் மூலம், தயாநிதி மாறன், மத்திய அரசிற்கு சுமார் 440 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்படுத்தியுள்ளார் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதன்பேரில், கடந்த ஆண்டின் இறுதியில் தயாநிதி மாறன் மற்றும் பி எஸ் என் எல் நிறுவனத்தின் அப்போதைய தலைமைப் பொது மேலாளர்களான ப்ரம்மதத்தன் மற்றும் எம்.பி.வேலுச்சாமி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தயாநிதி மாறனின் போட் க்ளப் வீட்டிற்கும், சன் டிவி குழும அலுவலகத்திற்கும் இடையே பதியப்பட்டுள்ள உயர்தர ஃபைபர் ஆப்டிக் கேபிள் தொடர்பில், சக்ஸேனாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.
எனினும், கேபிள் பதியப்பட்டது தொழில்நுட்பப் பிரிவு ஊழியர்களால் என்பதால், அத்துறையுடன் அதிகம் தொடர்பில்லாத தமக்கு அதிகமாக ஏதும் தெரியாதென்று, சக்ஸேனா தெரிவித்ததாகத் தெரிகிறது.
ஆரம்பகட்ட விசாரணையில், தயாநிதி மாறனின் வீட்டில் அமைக்கப்பட்டுள்ள 323 தொலைபேசி இணைப்புகளும், அப்போதைய பி எஸ் என் எல் பொது மேலாளர் வேலுச்சாமியின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதும், மாறனின் வீட்டிலிருந்து, சன் குழும அலுவலகத்திற்கு ஃபைபர் ஆப்டிக் கேபிள் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது. idlyvadai.blogspot.com

கருத்துகள் இல்லை: