திருமணம் செய்த கணவன் வீட்டில் கழிப்பறை இல்லாததால் கணவனோடு
ஒன்றாக வாழ முடியாது என்று கூறிவிட்டு பிறந்த வீட்டுக்கு சென்று விட்ட புது மணப்பெண்ணுக்கு பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு சமூக நல அமைப்பு பாராட்டு விழா நடத்தி கௌரவப்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த அந்த புரட்சி பெண்ணின் பெயர் லாதா. இவரை பாட்னாவுக்கு அருகிலுள்ள பிகா பலோத் என்ற கிராமத்தைச் சேர்ந்த கவுபீர் என்பவருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்தபின் மணப்பெண் லாதா கணவருடன் புகுந்த வீட்டிற்கு சென்றார். ஆனால் அங்குள்ள வீட்டில் கழிப்பறை வசதி இல்லை. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த லதா, கழிப்பிடறை வசதி இல்லாத இங்கு என்னால் வசிக்க முடியாது. கழிப்பறை கட்டினால் மட்டுமே என்னை கூப்பிடுங்கள் என்று கூறிவிட்டு மீண்டும் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனையறிந்த சுலப் இன்டர்நேஷனல் என்ற சமூக நல அமைப்பு லாதாவின் கணவர் வீட்டில் கழிப்பறை கட்டிக்கொடுத்ததோடு அப்பெண்ணுக்குப் பாராட்டு விழா ஒன்றும் நடத்தியது.
விழாவில் பேசிய அந்த அமைப்பின் இயக்குனர், "காலைக் கடன்களுக்கு பெண்கள் திறந்தவெளியைப் பயன்படுத்த வேண்டியிருப்பது மிகவும் கொடுமையானது. இந்த விவகாரத்தில் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும். இது பெண்களின் அடிப்படை உரிமை“ என்று வலியுறுத்தினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக