மக்களவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து,
திமுகவினர் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர்
கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: திமுகவை 1969-ஆம் ஆண்டு அண்ணா ஒப்படைத்து விட்டுச் சென்றார். கடந்த 45 ஆண்டுகளாக திமுகவின் தலைமைப் பொறுப்பு என்னுடைய தோள்களில் ஏற்றப்பட்டுள்ளது.
இந்த 45 ஆண்டுகளில் எத்தனையோ பிரச்னைகள், துரோகங்களைச் சந்தித்து, அனைத்தையும் சாதுர்யமாக அடக்கிச் சமாளித்துத்தான் திமுக அமைதியாக நடை போட்டு வருகிறது. யார் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்பதில் தான் முக்கியமான கேள்வியே அடங்கி இருக்கிறது , கலைஞர் அவர்களே பகுத்தறிவு சுயமரியாதை இயக்கத்தின் கலங்கரை விளக்கம் தாங்கள்தான் , ஆனால் ஸ்டாலின் என்ற ஒரு மனிதரால் தான் திமுகவின் இத்தனை இடர்களும் தற்போது ஏற்பட்டிருக்கிறது, அவர் எவ்வளவோ நல்ல சாதனைகளை நிகழ்த்தி உள்ளார் , அவற்றை நாம் மறுக்க வில்லை , ஆனால் தற்போது திமுகவை வெறும் இன்னொரு அதிமுக பாணியில் மாற்றி அமைத்துவிட்டார் , தமிழ்நாடு இன்னொரு அதிமுகவை தாங்காது
"திமுகவை உடைத்து விட்டேன்' என்று கர்ச்சனை செய்தவர்கள், அண்ணா அறிவாலயத்தை, அண்ணா தந்த இரு வண்ணக் கொடியையும் கைப்பற்றிச் சொந்தம் கொண்டாடத் துடித்தவர்கள், தீக்குண்டத்தில் கிடத்தப்பட்டபோது, அதன் மீது பெட்ரோலை ஊற்றத் துணிந்தவர்கள் என உடன்பிறந்தே கொல்லும் வியாதியைப் போன்று எத்தனையோ அதிசய மனிதர்களின் சதிகளைத் தவிடு பொடியாக்கி, இரட்டிப்பு எழுச்சியோடு திமுக வளர்ந்திருக்கிறது.
தேர்தலில் பணியாற்றாத திமுகவினர்: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக பெரும் தோல்வி கண்டுள்ளது. இது போன்ற தோல்விகளைக் கடந்த காலத்தில் திமுக பெற்று, மீண்டெழுந்து, வெற்றி முகட்டை எட்டிப் பிடித்திருக்கிறது. எனினும், இப்போதைய தோல்விக்குப் பலராலும் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. அண்ணா ஒரு முறை, ""தம்பி உன்னை யாராலும் அழித்திட முடியாது. உன்னை நீயே அழித்துக் கொண்டால் தவிர'' என்று சொன்னார்.
சுய பரிசோதனை தேவை: எனவே, அந்த அரிய கருத்துகளை எல்லாம் எண்ணிப் பார்த்து, இந்த தேர்தல் முடிவினை திமுவினர் தங்களைச் செம்மைப்படுத்திக் கொள்ள பயன்படுத்த வேண்டும்.
ஒவ்வொருவரும் சுய பரிசோதனை செய்து, நாம் எங்கிருக்கிறோம், என்ன செய்கிறோம், அதன் விளைவுகள் என்ன என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். திமுகவின் லட்சியங்களுக்கும், கொள்கைகளுக்கும் முழுவதுமாய் இயைந்த வகையில் இருந்திட எப்படிப்பட்ட சிந்தையும் செயலும் வேண்டுமென்று உணர்ந்து கொள்ள வேண்டும்.
அதுவே, திமுகவினர் அடுத்து பெறப் போகும் வெற்றிக்கு அச்சாரமாக அமையும். இதுவே திமுகவினருக்கு எனது 91-ஆவது பிறந்த நாள் செய்தி என்று அவர் கூறியுள்ளார். dinamani.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக