புதன், 4 ஜூன், 2014

அமலாக்க துறையின் குற்றச்சாட்டு பொய்': சிறப்பு கோர்ட்டில் கனிமொழி வாதம்

புதுடில்லி:'கலைஞர், 'டிவி'க்கு பணப் பரிமாற்றம் நடந்ததாக கூறப்படும் இந்த வழக்கில் ஜாமின் கோரி, கனிமொழி சார்பில், மனு தாக்கல் செய்யப் பட்டது. இந்த மனு, நீதிபதி ஓ.பி.சைனி முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கில், எனக்கு எந்த தொடர்பும் இல்லை. என் மீதான குற்றச்சாட்டுகள் புனையப் பட்டுள்ளன' என, தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி தரப்பில், நேற்று, டில்லி சிறப்பு கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்த வழக்கு, டில்லி, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடக்கிறது. தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க திராணியில்லாமல் வழக்கை தடுத்து நிறுத்த ஒவ்வொரு கோர்ட்டாக ஏறி இறங்குபவர்கள் (jeyalalitha _) பெரும் பதவிகளை அடைய முடிகிறது. மக்களும் அதற்கு ஆதரவாக இருக்கிறார்கள். இங்கு கனிமொழி தன் மீதான வழக்கு பொய்யென தைரியமாக வாதாடுகிறார். இதில் தான் குற்றமற்றவர் என நிரூபித்து விட்டால் இன்று கிண்டல் கேலி செய்பவர்கள் அரசியல் பேசுவதையே நிறுத்தி விடுவார்களா.......? ஆளுக்கு தகுந்த வேஷம் கட்டுவதில் நம் மக்களுக்கு இணை யாரும் கிடையாது.
இதில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெறுவதற்காக, கலைஞர் 'டிவி'க்கு 200 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக, மத்திய அமலாக்க துறை சார்பில், சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதில், தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

அப்போது, கனிமொழி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரெபக்கா ஜான், வாதிட்டதாவது:கலைஞர் 'டிவி'க்கு பணப் பரிமாற்றம் நடந்ததாக கூறப்படும் வழக்கில், என் கட்சிகாரருக்கு துளியளவு கூட தொடர்பு இல்லை. குற்றச்சாட்டுகள் போலியாக புனை யப்பட்டுள்ன. என் கட்சிக்காரருக்கு எதிராக, இது தொடர்பாக எந்த ஆதாரமும் இல்லை.

13 நாட்கள்



கலைஞர் 'டிவி'யின் புரமோட்டர் டைரக்டராக, 13 நாட்கள் பதவி வகித்ததையும், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவின் அலுவலகத்துக்கு சென்றதையும் காரணம் காட்டி, கனிமொழி மீது, இந்த குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் வாதிட்டார். dinamalar.com

கருத்துகள் இல்லை: