சென்னை: குழந்தைகளை விற்றது தொடர்பாக, கைதான பிரேம்ராஜின் குழந்தை பிறந்தது முதல் ஒரு மாதகாலம் அவசர
சிகிச்சை பிரிவிலேயே இருந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தில்தான் பிரேம்ராஜின்
மனது மாறியுள்ளது. பக்கத்து வார்டில் பிரசவத்திற்கு வந்த வேலூரை சேர்ந்த
ஒரு தம்பதிக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகளும் பிரசவத்தில் இறந்து விட
கவலையில் இருந்த அவர்களிடம் தனது குழந்தையை ஒப்படைக்க முடிவு செய்த
பிரேம்ராஜ், இதுபற்றி மனைவி மஞ்சுளாவிடம் பேசியுள்ளார்.
‘நம்மால் இந்த குழந்தையை பார்த்துக் கொள்ள முடியாது. ஆகவே குழந்தையில்லா தம்பதியிடம் குழந்தையை ஒப்படைத்துவிடுவோம்‘ என்று கூறியுள்ளார். பின்னர் மஞ்சுளாவின் சம்மதத்துடன் முதல் குழந்தையை வேலூர் தம்பதிகளுக்கு கொடுக்க அவர்கள் தந்த 5 ஆயிரத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.
பின்னர் 2010ல் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையை 30 ஆண்டுகளாக குழந்தைகள் இல்லா தம்பதிக்கு 50 ஆயிரத்துக்கு விற்றுள்ளார். 2012ல் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 3வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. அதை தீபா என்ற பெண்ணுக்கு 30 ஆயிரம் பேசி ஸீ15 ஆயிரம் பெற்றுக்கொண்டு கொடுத்துள்ளார். குழந்தைகளை விற்ற பிறகு, அக்கம் பக்கத்த¤னர் மற்றும் உறவினர்கள் கேட்டால் பிரசவத்தில் குழந்தை இறந்து விட்டது. அங்கேயே புதைத்து விட்டோம் என்று கூறுவது வழக்கம். இதற்கிடையே, குழந்தைகளை விற்கும் கும்பலுக்கும் பிரேம்ராஜிக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. குழந்தைகளை கடத்தி விற்பது, சட்டவிரோதமாக தத்து கொடுப்பது போன்ற கும்பல்கள் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நடமாடி வருவதாக குழந்தைகள் நல ஆணையத்துக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரகசிய தகவல் வந்துள்ளது.
இதையடுத்து குழந்தைகள் நல ஆணையத்தை சேர்ந்த நபர்கள் ரகசியமாக கண்காணித்துள்ளனர். அப்போது குழந்தையை விற்க முயன்றபோது மஞ்சுளாவையும் பிரேம் ராஜையும் கடந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். கீழ்ப்பாக்கம் போலீசார் இந்த வழக்கை வில்லிவாக்கம் போலீசாருக்கும், வில்லிவாக்கம் போலீசார் எழும்பூர் போலீசாருக்கும் வழக்கை தள்ளிவிட எழும்பூர் போலீசார் பிரேம்ராஜ் மீது எப்ஐஆர் போட்டுவிட்டு அவரை விட்டு விட்டனர். மஞ்சுளாவை குழந்தைகள் நல அமைப்பினர் பெரவள்ளூரில் உள்ள ஒரு மகளிர் காப்பகத்தில் சேர்த்துள்ளனர். கடந்த 8 மாத காலமாக அவர் அங்கேயே இருந்துள்ளார். இதனிடையே பிரேம்ராஜ் மீண்டும் குழந்தைகள் விற்கும் கும்பலுடன் பேசி தனது குழந்தையை விற்க முயற்சி செய்ய அதற்காக கடந்த 3 நாட்களுக்கு முன் பெரவள்ளூர் விடுதிக்கு சென்று தனது மனைவி மஞ்சுளாவிடம் பேசி குழந்தையை கடத்த முயற்சிக்கும்போது காப்பக ஊழியர்கள் பிரேம்ராஜை பிடித்து வைத்து குழந்தைகள் ஆணையத்துக்கு தகவல் அளித்ததன் பேரில் எழும்பூர் போலீசார் பிரேம் ராஜை கைது செய்தனர்.
போலீசார் அலட்சியம்
ஏழை தம்பதிகள் குழந்தை, வேண்டா வெறுப்பாக குழந்தை பெற்றுக்கொள்பவர்கள், கள்ளத்தொடர்பால் குழந்தை பெற்றுக்கொள்பவர்கள், அபலைகள், வாழ வழி இல்லாதவர்கள் ஆகியோரை அரசு மருத்துவமனைகளில் இனங்கண்டு அவர்களிடம் நைசாக பேசி குழந்தைகளை வாங்கி விற்கும் புரோக்கர் கும்பல் சென்னையில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் சுற்றிவருகின்றனர். இவர்களிடம் சிக்கும் ஏமாந்தவர்களின் குழந்தைகளை குழந்தை இல்லா பெற்றோருக்கு லட்சக்கணக்கில் விற்று காசாக்கி கொண்டு குழந்தைகளை கொடுக்கும் அபலைகளுக்கு சில ஆயிரங்களை மட்டும் தருகின்றனர். இதுபற்றி தீவிரமாக கண்காணிக்க வேண்டிய போலீசார் பிரேம்ராஜ் விஷயத்தில் கோட்டை விட்டு பின்னர் தற்போது கைது செய்துள்ளனர். ஆனால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போட்ட அதே எப்ஐ.ஆரின் பேரிலேயே வழக்கு பதிவு செய்துள்ளனர். கிட்னி புரோக்கர்கள், குழந்தை விற்கும் புரோக்கர்களின் கூடாரமாக அரசு பொது மருத்துவமனைகள் மாறி வருகிறதா? என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது. dinakaran.com
பின்னணியில் குழந்தை கடத்தும் மர்ம கும்பல் செயல்படுவதாக புகார் அளித்தவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே பிரேம் ராஜை பிடித்து கொடுத்தும் போலீசார் அலட்சியமாக விட்டு விட்டதாக குழந்தைகள் நல அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் பிரேம்ராஜ் (35). இவரது முதல் மனைவி விமலா, 19 வருடங்களுக்கு முன் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆரம்பத்தில் பெயின்டர் தொழில் பார்த்த பிரேம்ராஜ், குடிப்பழக்கத்திற்கு ஆளாகி குடும்பத்தை கவனிக்காததால் ஒன்றரை ஆண்டிலேயே இருவருக்கும் விவாகரத்து ஆனது. பின்னர் 2007ல் மஞ்சுளா என்பவரை 2வது திருமணம் செய்துள்ளார் பிரேம்ராஜ். பெயின்டர் தொழில் கைகொடுக்காததால் தனியார் செக்யூரிட்டி வேலைக்கு சென்றுள்ளார். 2வது மனைவிக்கு 2009ல் முதல் பெண் குழந்தை பிறந்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக