சென்னை: வருகிற 3 ம் தேதி டில்லி சென்று பிரதமரை சந்தித்து தமிழக நிதி நலன் அக்கறை குறித்து பேச்சு நடத்தவிருக்கும் வேளையில் மத்திய அரசு மீது தமிழக முதல்வர் தனது அதிருப்தியை அவசரப்பட்டு வெளியிட்டுள்ளார். நேற்று நள்ளிரவு முதல் டீசல் விலை 50 பைசா உயர்ந்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக முதல்வர் ஜெ., மோடி அரசை கண்டித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது; உணவு பண வீக்கத்தை கட்டுப்படுத்துவது தான் மத்திய அரசின் முதல் பணியாக இருக்கும் என சமீபத்தில் மத்திய அமைச்சர் ஒருவர் கூறிய சில மணி நேரத்தில்
இந்த டீசல் உயர்வு வேதனை தருகிறது. இதன் காரணமாக சுற்றுலா செல்வோர். மாணவ , மாணவிகள், பயணச்செலவு அதிகரிக்கும். நுகர் பொருட்கள் விலை உயர்வு காரணமாக ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.
ஏமாற்றமே மிஞ்சியுள்ளது : ஏன் சொத்து குவிப்பு வழக்கை ஊத்தி மூட சம்மதிக்கலயோ ?
டீசல் விலை உயர்வு மக்களை கடுமையாக பாதிக்கும். எனவே பிரதமர் தலையிட்டு டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். டீசல் விலை உயர்வு மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. காங்கிரஸ் அரசின் தவறான கொள்கையையே புதிய மத்திய அரசு கையாள்வது போல் உள்ளது. பெட்ரோலிய பொருள் விலை நிர்ணய கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும். இதற்கான அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து திரும்ப பெற வேண்டும். மத்திய அரசு முந்தைய காங்., அரசின் கொள்கையில் மாற்றம் இல்லாமல் தொடர்ந்து கடைபிடிப்பது போல் உள்ளது. எது எப்படியோ மாற்றம் மூலம் ஏற்றம் வரும் என நினைத்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு ஜெ., கூறியுள்ளார்.dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக