வெள்ளி, 17 ஜனவரி, 2014

சசி தரூர் - பாக்., பெண் நிருபர் கள்ளக்காதல்? மூன்றாவது மனைவி தகவல்

புதுடில்லி: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, மத்திய அமைச்சர், சசி தரூர், 57, பாகிஸ்தானைச் சேர்ந்த, பெண் பத்திரிகையாளர் ஒருவருடன், கள்ளத்தொடர்பு வைத்துள்ளதாக, அவர் மனைவி, சுனந்தா புஷ்கர், 'ட்விட்டர்' இணையதளத்தில், புகார் தெரிவித்துள்ளார். இதை மறுத்துள்ள சசி தரூர், ''என் ட்விட்டர் கணக்கை யாரோ, 'ஹாக்' செய்து, தவறான தகவல்களை பரப்பியுள்ளனர்,'' என, தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர்: ஐக்கிய நாடுகள் சபையில், உயர் பதவியில் பணியாற்றி ஓய்வுபெற்ற சசி தரூர், கடந்த சில ஆண்டுகளாக, அரசியலில் ஈடுபட்டு, காங்கிரஸ் வேட்பாளராக, திருவனந்தபுரம் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை இணையமைச்சராகவும் ஆகியுள்ளார். இவர், இரண்டு மனைவிகளை விவாகரத்து செய்துள்ளார். 2010ல், காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த, சுனந்தா புஷ்கர் என்ற பெண்ணை, திருமணம் செய்தார். அந்த திருமணத்தில், சசிக்கும், முதல் மனைவிக்கும் பிறந்த, 16, 18 வயது மகன்கள் பங்கேற்றனர். சமூக வலைதளங்களான, ட்விட்டர் மற்றும் பேஸ்புக் போன்றவற்றை பயன்படுத்தி, தனக்கு நெருக்கமானவர்கள் மற்றும் நண்பர்களுடன், நிமிடத்திற்கு நிமிடம் தொடர்பில் இருக்கும் சசி தரூர், சில நேரங்களில், தேவையற்ற தகவல்களை தெரிவித்து, சிக்கல்களிலும் மாட்டிக் கொள்வதுண்டு.பெண் ஏஜெண்டுகள் நல்லமுறையில் பணி செய்வதாக பேச்சுண்டு. சேட்டன நம்பமுடியாது.ஐ பி காரங்க கவனமா இந்தாள தொடர்ந்து கவனியுங்கள். தேர்தல் நேரத்தில் இது வேற தலைவலி.
இதனால், கடந்த முறை, வெளியுறவுத்துறை இணையமைச்சர் பதவியையும் அவர் இழந்தார். நிலைமை இவ்வாறு இருக்க, நேற்று, அவர் மனைவி சுனந்தா, புதிய சர்ச்சையை கிளப்பினார். அவர் கணவர், ட்விட்டர் இணையதள முகவரியிலிருந்து, சகட்டுமேனிக்கு, தகவல்களை வெளியிட்டுள்ளார்.






அதில், அவர் கூறியுள்ளதாவது:
எனக்கும், என் கணவருக்கும் இடையேயான அமைதியான திருமண வாழ்க்கையில், பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர், மெகர் தரர் புகுந்துள்ளார். அவர் என் கணவருடன், கள்ளத் தொடர்பில் உள்ளார். அவர் என் கணவரை, பின்தொடர்ந்து, அவர் என்ன செய்கிறார் என்பதை ஆராய்ந்து வருகிறார். அவரால், எங்கள் இருவருக்கும் இடையேயான திருமண உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நான், சசி தரூரை, விவாகரத்து செய்யலாம் என்று கூட, நினைக்கும் அளவிற்கு நிலைமை உள்ளது.






ஐ.எஸ்.ஐ., உளவாளி:
அந்தப் பெண், பாகிஸ்தான் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ.,யின் உளவாளி. அவரால் என் கணவருக்கு பாதிப்பு ஏற்படலாம் என, அஞ்சுகிறேன். இது போன்று, பல, தகவல்களை வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த, லாகூரில் வசிக்கும், அந்தப் பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர், மெகர் தரர், 'சுனந்தாவுக்கு, மனநிலை சரியில்லை போல் தெரிகிறது. என்னைப் பற்றி, தேவையில்லாத பல தகவல்களை தெரிவித்துள்ளார். அவர் மீது நான், மானநஷ்ட வழக்கு தொடர உள்ளேன். நான் ஏன், சசி தரூரை பின்தொடர வேண்டும்...' என, அவரும், அதே இணையதளத்தில், செய்திகளை வெளியிட்டுள்ளார்.






அவசர மறுப்பு:
இதனால், சசி தரூர், அவசரம் அவசரமாக, அந்தச் செய்திகளை மறுத்துள்ளார். அதில், 'மன்னிக்க வேண்டும் நண்பர்களே... என், ட்விட்டர் இணையதள முகவரியை, யாரோ திருடி, தேவையில்லாத தகவல்களை பரப்பி விட்டனர்; அவற்றை மறந்து விடுங்கள்' என, கூறியுள்ளார். சசி தரூர், சதாசர்வ காலமும், ட்விட்டர் இணையதளம் மூலம், செய்திகளை, தகவல்களை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அவர் பெயரில், அவரின் மனைவி, சுனந்தா வௌ?யிட்ட தகவல்களால், பிரச்னை ஏற்பட்டதும், 'என் இணையதள முகவரியை யாரோ திருடிவிட்டனர்' என, கூறி, பிரச்னையை மறைக்கப் பார்க்கிறார் என, ட்விட்டர் வட்டாரங்கள் தெரிவித்தன. அது போல், சசி தரூரும், அவர் மனைவியும் சேர்ந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், இந்தத் தகவலையே திரும்பவும் கூறியுள்ளனர்.
தினமலர்.கம 

கருத்துகள் இல்லை: