வெள்ளி, 17 ஜனவரி, 2014

கோமாளித்தனமே பிரபலமாவதற்கான மந்திரம். அறிவாளிகளை போல் நடிப்பதே இலக்கியவாதிகளுக்கான பாத்திரம்.சுப்பிரமணிய சுவாமியும் ‘நவீன’ இலக்கிய சு. சுவாமிகளும்

??????????????????????சுப்பிரமணியன் சுவாமி தனி கட்சி நடத்தியபோது அவரும் அவருடன் அவரும் மட்டும்தான் கட்சியில் இருந்தார்கள்.
இன்றைக்கும் அவர் பி.ஜே.பியில் இருக்கும்போதும் அதுவே நிலைமை.
ஆனால் பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் அவரை மாபெரும் மக்கள் தலைவராக சித்தரித்து அவர் செய்திகளை லட்சக்கணக்கான மக்கள் படிப்பதைப்போன்ற பாவனையில் முக்கி முக்கிப் பேசுகிற அவர் தமிழுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள்.
அதுபோலவே 200, 300 அதிகபட்சம் 500 பிரதிகளை மட்டுமே அச்சடித்து அதை 500 வருடமாக பரணில் பத்திரமாக வைத்திருக்க போகிற சு. சுவாமியைப் போலவே,
அதிகம் சம்ஸ்கிருதத்தோடு கொஞ்சமாக தமிழ் கலந்து எழுதுகிற ‘நவீன’ இலக்கியவாதிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிற இலக்கிய உலக சுப்பிரமணியன் சுவாமிகளுக்ளுக்கு,
பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், பதிப்பகங்கள் தருகிற முக்கியத்துவம் கோமாளித்தனமானதாக மட்டுமில்லை, தந்திரமானதாகவும் இருக்கிறது.
இந்த இலக்கிய கோமாளிகளை தூக்கி நிறுத்துவதின் மூலம் ஜாதி, மத எதிர்ப்பாளர்களான முற்போக்காளர்களை, சம்ஸ்கிருத எதிர்ப்பு தமிழ் இன உணர்வாளர்களைத் தவிர்ப்பதே இதன் தந்திரம்.

கோமாளித்தனமே பிரபலமாவதற்கான மந்திரம். அறிவாளிகளை போல் நடிப்பதே இலக்கியவாதிகளுக்கான பாத்திரம்.
(‘நவீனங்கள்’ எழுதுகிற கதை, கவிதைகளைவிட ‘கை வைத்தியம், சமையல் குறிப்பு, சரும பராமரிப்பு, சளி தொல்லை தவிர்க்க, வெள்ளைப்படுதலில் இருந்து விடுதலை, மலச்சிக்கல் போயே போச்சு, மலட்டுத்தனம் நீங்கி மகப்பேறு, விரை வீக்கம் சிகிச்சைக்கு முன் சிக்கிச்சைக்கு பின், மூலம், பவுத்திரம், மூணே நாளில் பிரபலமாவது எப்படி?, தூங்கிக் கொண்டே பணம் சம்பாதிப்பது எப்படி?’
போன்ற புத்தங்கங்ளே பரவாயில்லை.)
இன்று காலை face book ல் எழுதியது.(புத்தகக் காட்சி சிந்தனை)mathimaran.wordpress.com/
**

கருத்துகள் இல்லை: