திங்கள், 13 ஜனவரி, 2014

விஜயகாந்த் : கூட்டணி விஷயத்தில் அவசரப்படமாட்டேன் !

பொங்கல் திருநாளையொட்டி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கட்சியினருடன் பொங்கல் பானையில் பொங்கலிடும் பிரேமலதா. உடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த். வரும் மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக அவசரப்பட மாட்டேன் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறினார்.
தே.மு.தி.க. சார்பில் பொங்கல் விழா சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நல்ல விலை தரும் விநியோகஸ்தர்களுக்கே/கட்சிகளுக்கே  ஏரியாக்கள் விற்கப்படும் அதாவது தொகுதிகளுங்கோ ! இந்த தமில் மக்கல் ரொம்ப நல்லவனுங்கோ சினிமால இருந்து எவன் வந்தாலும் இளிப்பானுங்கோ 
இந்த விழாவில் கட்சியின் மகளிர் அணியினர் பொங்கல் வைத்தனர். திரைப்பட பின்னணி பாடகர் வேல்முருகன் குழுவினரின் இசை நிகழ்ச்சி மற்றும் ஒயிலாட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில் விஜயகாந்த் பேசியது:
தே.மு.தி.க. சார்பில் ரம்ஜான், கிறிஸ்துமஸ், பொங்கல் என வரிசையாகக் கொண்டாடி வருகிறோம். எல்லா மதத்தினரும் ஒற்றுமையாக இருக்கிறோம்.
தே.மு.தி.க.வில் சண்டை வருமா, பிரிக்க முடியுமா என சிலர் பார்க்கிறார்கள். கட்சியை யாராலும் பிரிக்க முடியாது. பா.ஜ.க.வை விமர்சிக்காமல் உள்ளதாகவும், அவர்களுடன் கூட்டணி வருமா என்றும் கேட்கின்றனர். பா.ஜ.க. குறித்தும் கூறுகிறேன். அவர்கள் ராமர் கோயிலை அதே இடத்தில்தான் (அயோத்தி) கட்ட வேண்டும் என்று கூறி வருவது கண்டிக்கத்தக்கது.
தேர்தல் தொடர்பாக நான் என்ன வியூகம் அமைத்திருக்கிறேன் என்பது யாருக்கும் தெரியாது. இடைத்தேர்தல்களைப் போல் பொதுத்தேர்தலில் இலவசங்களைக் கொடுத்து மக்களை ஏமாற்ற முடியாது.
வரும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகம் என்னிடம் இருக்கிறது. கூட்டணி குறித்து அவசரப்படமாட்டேன், பொறுமையாக இருப்பேன் என்றார் விஜயகாந்த்.
இந்நிகழ்ச்சியில், பிரேமலதா விஜயகாந்த், கட்சிப் பொருளாளர் ஏ.ஆர். இளங்கோ, தலைமை நிலையச் செயலாளர் ப.பார்த்தசாரதி, கொள்கை பரப்புச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை: