புதுடெல்லி,
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கூட்டம் வருகிற ஜனவரி 17ந்தேதி கூடுகிறது. இதில், பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி சார்பில் நிறுத்தப்படுபவர் குறித்து முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அக்கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி இன்று கூறுகையில், தன்னிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டால் அதனை ஏற்கதான் தயார் என்று தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவது நாட்டிற்கு நல்லது. ஒரு பதவியை குறித்து கவனம் செலுத்தி அதன் மீது விவாதம் நடத்துவதை விடுத்து அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டு வருவது குறித்து விவாதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஒருவரது கருத்துகளை மட்டும் வைத்து நாட்டை வழிநடத்தி செல்ல இயலாது என்று அவர் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியை தாக்கும் விதமாக பேசினார். நாட்டை ஒன்றுபடுத்தியது காங்கிரஸ்தான் என்றும் அவர் கூறியுள்ளார் dailythanthi.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக