வெள்ளி, 17 ஜனவரி, 2014

புரட்சி நடிகை நயன்தாரா பிரபு தேவாவுடனும் நடிப்பார்

சென்னை:மாஜி 1 லவ்வர் சிம்புவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்கும் நயன்தாரா, விரைவில் மாஜி 2 லவ்வர் பிரபுதேவா இயக்கத்திலும் நடிப்பார் என்று பரபரப்பு எழுந்துள்ளது. பிரபுதேவாவுடன் காதல் மலர்ந்த பிறகு நடிக்காமல் ஒதுக்கிய நயன்தாரா. அவரது பிரிவுக்கு பிறகு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தினார். தமிழ், தெலுங்கு என மளமளவென படங்களை ஒப்புக்கொண்டு நடித்தார். படங்களும் ஹிட் ஆனதால் கைநிறைய படங்களை ஒப்புக்கொண்டார். இந்நிலையில் மாஜி 1 காதலன் சிம்புவுடன் நடிக்க அழைப்பு வந்தது. பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தில் நயன்தாரா நடிப்பாரா? மாட்டாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் சிம்வுடன் நடிக்க ஒப்புக்கொண்ட நயன்தாரா கோலிவுட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தினார். இருவரும் நடித்த காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது.
இதற்கிடையில் இந்தியில் வெளியான ‘கஹானி தமிழ், தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா நடித்துள்ளார். விரைவில் அப்படம் திரைக்கு வரவுள்ளது. இதுதவிர உதயநிதியுடன் ‘இது கதிர்வேலன் காதல்‘ என்ற படத்திலும், ஜெயம் ரவியுடன் ஜெயம் ராஜா இயக்கும் படத்திலும் நடிக்கிறார். இப்படங்களை முடித்து கொடுத்தபிறகு  இனி தமிழில் வருடத்துக்கு ஒரு படம் மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்திருக்கிறாராம். திடீரென்று நயன்தாரா இப்படி முடிவெடுக்க காரணம் அவரது கவனம் இந்தி பக்கம் திரும்பி இருப்பதுதானாம். ஏற்கனவே சிம்பு மீதான கோபம் நீங்கி அவரது ஜோடியாக நயன்தாரா நடித்துவரும் நிலையில் இந்தியில் பிஸியாக இருக்கும் மாஜி 2 காதலன் பிரபுதேவா இயக்கும் படத்திலும் நயன்தாரா நடிக்கக்கூடும் என்று கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.புரட்சி நடிகை நயன்தாரா பிரபு தேவாவுடனும் நடிக்க பொகிராரர் 

கருத்துகள் இல்லை: