வியாழன், 16 ஜனவரி, 2014

டெல்லியில் மீண்டும் வெளிநாட்டுப்பெண் பாலியல் பலாத்காரம்



A Danish woman has alleged that she was gang-raped in the Indian capital of New Delhi - the latest high-profile case of sexual assault against women in the country.
Reports say the 51-year-old woman was in New Delhi for a week and had been visiting touristy sites in Agra and later the National Museum in the capital.
புதுடெல்லி : டெல்லியில் டென்மார்க் நாட்டை சேர்ந்த பெண் 8 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த  விவரம் வருமாறு: டென்மார்க் நாட்டை சேர்ந்த 51 வயது பெண் ஒருவர் கடந்த வாரம் சுற்றுலா விசாவில் இந்தியாவிற்கு வந்தார். செவ்வாய்கிழமை மாலையில் டெல்லி தேசிய அருங்காட்சியகத்தை பார்த்து விட்டு ஓட்டலுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். சில கிலோ மீட்டர் தூரம் சென்றபிறகுதான், பாதை மாறி வந்தது தெரிந்தது.பாஹர்கஞ்ச் ரயில்நிலையம் அருகில் நின்றுகொண்டிருந்த நாடோடி கூட்டத்திடம், ஓட்டல் அமேக்சிற்கு எப்படி செல்ல  வேண்டும் என்று வழி கேட்டார். அந்தப் பெண் தனியாக வந்ததை தெரிந்து கொண்ட எட்டுபேர் கொண்ட கும்பல், அந்தப் பெண்ணை அடித்து உதைத்து, ஒதுக்குபுறமாக தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது. அவரிடம் இருந்த பணம், செல்போனை பறித்துக்கொண்டு சென்றுவிட்டது.
அந்தப் பெண் ஒருவழியாக தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்து சேர்ந்தார். அங்கிருந்து அவர் தன் நாட்டின் தூதரகத்திற்கும், போலீசுக்கும் புகார் அளித்தார். டெல்லி போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. பின்னர், அந்தப் பெண் அளித்த தகவலின்படி அதிரடி சோதனையில் இறங்கிய டெல்லி போலீசார், ரயில் நிலையம் பகுதியில் பதுங்கியிருந்த 8 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த பெண், விமானம் மூலம் கோபன்ஹேனுக்கு புறப்பட்டுச் சென்றார்.  மேலும், பாலியல் தொடர்பான புகாரில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள அவர் மறுத்துவிட்டார் dinakaran.com/

கருத்துகள் இல்லை: