
இதுகுறித்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நேற்று மாலை ஆலோசனை நடத்தப்பட்டது. அவசர சட்டம் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதனால் இன்னும் ஓரிரு நாளில் அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என தெரிகிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்ட திருத்த மசோதா வுக்கு எதிர்கட்சிகள் ஏற்கனவே ஆதரவு தெரிவித்ததால், இந்த அவசரம் சட்டத்துக்கு நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடரில் எதிர்ப்பு இருக்காது என கூறப்படுகிற
பதவியை உடனடியாக பறிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை செல்லாததாக்க, அவசர சட்டம் கொண்டு வருவதற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. குற்ற வழக்கில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெறும் எம்பி, எம்எல்ஏக்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை 10ம் தேதி தீர்ப்பளித்தது. இதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக