திங்கள், 2 செப்டம்பர், 2013

பிடிபட்ட ஜெயசங்கர் 24 கற்பழிப்பு கொலை! பெண் போலீசையே கற்பழித்து கொன்றவன்

 பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசையே கற்பழித்து கொன்றவன் ஜெய்சங்கர்" காமக் கொடூரன் ஜெய்சங்கர் சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியில் மினி பஸ் டிரைவராகவும் பணியாற்றியுள்ளான். அப்போது பஸ்சில் பயணம் செய்த போலீஸ் ஏட்டு ஒருவரின் மனைவியும் மகளிர் சுய உதவிக்குழ தலைவியுமான இந்திரா காந்தியுடன் தொடர்பு ஏற்பட்டது.
பின்னர் இந்திரா காந்தியை அவன் கற்பழித்து கொன்றான். அவர் அணிந்த இருந்த நகைகளை எடுத்து சென்று ஜலகண்டாபுரம் பகுதியில் ஒரு கும்பலுடன் சூதாடி அதில் தோற்று விட்டான். இந்திராகாந்தியின் செல்போனை எடுத்து சென்று அந்த போன் மூலம் மற்றவர்களுடன் பேசியபோது இடைப்பாடி போலீசில் சிக்கிக்கொண்டான்.
முதன் முதலில் இந்த வழக்குதான் அவன் மீது பாய்ந்தது. ஜெயிலுக்கு சென்று விட்டு வெளியில் வந்த இவன் லாரி டிரைவராக வேலைக்கு சென்றான். அப்போது தேசிய நெடுஞ்சாலை ஓரத்திலும் ,ரோட்டிலும் நிற்கும் பெண்களை கடத்தி சென்று கற்பழித்து கொலை செய்தான்.

கடந்த 2009–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 23–ந்தேதி கோவையில் பாதுகாப்புக்கு சென்று விட்டு பெருமா நல்லூர் பகுதியில் பஸ்சுக்கு காத்து நின்ற பெண்போலீஸ் ஏட்டு ஜெயமணி என்பவரை கற்பழித்து கொன்றான்.
தர்மபுரி மாவட்டம் பென்னாம்பட்டியில் ஒரு வீட்டில் தண்ணீர் கேட்டு சென்ற இவன் அந்த வீட்டில் இருந்த பெண்ணை கற்பழித்து கொன்றான். தொப்பூர் அருகே செம்பரகாம்பட்டி என்ற இடத்தில் காட்டில் ஒரு பெண்ணையும், தொப்பூர் அருகே பூரிக்கல் என்ற இடத்தில் வனத்துறை நாற்றாங்காலில் வேலை பார்த்த இளம்பெண் ஒருவரையும் ,ஏ.பள்ளிப்பட்டி பகுதியில் ஒரு பெண்ணையும் கற்பழித்து கொன்றான்.
காரிமங்கலம் பெரியாமம்பட்டியில் ஒரு பெண்ணை வீடு புகுந்து கற்பழிக்கவும் முயன்று உள்ளான். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பேரண்ட அள்ளி என்ற இடத்தில் கடந்த 2009–ம் ஆண்டு ஜூலை மாதம் 3–ந் தேதி அன்ற சியாமளா (வயது 45) என்ற பெண்ணையும் தாக்கி கற்பழிக்க முயற்சி செய்து உள்ளான்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே மாந்தோப்பில் ஒரு பெண்ணுடன் பேச்சு கொடுத்து அவளை கற்பழிக்க முயன்ற போது அந்தப்பெண்ணும் தப்பி ஓடி உயிர் தப்பினார்.
இவன் தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும் பல பெண்களை கற்பழித்து கொன்று இருக்கிறான். கர்நாடக மாநிலம் தும்கூர், பெல்லாரி சித்ரதுர்கா உள்ளிட்ட பல பகுதிகளில் வீடு புகுந்து தைரியமாக பல பெண்களை கற்பழித்து கொன்று இருக்கிறான். சிதரதுர்கா பகுதியில் கணவன் கண் எதிரிலேயே ஒரு பெண்ணை கற்பழித்து கொன்றான்.
கடந்த 2011–ம் ஆண்டு கர்நாடக மாநிலம் பிஜப்பூர் அருகே ஒலக்கி என்ற இடத்தில் ஒரு பெண்ணை கற்பழிக்க முயன்ற போது பொது மக்கள் சுற்றி வளைத்து பிடித்து இவனை போலீசில் ஒப்படைத்தனர். அதன் பிறகு இவன் பெங்களுர் அருகே உள்ள பரப்பன அக்ரகாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தான். கோர்ட்டு அனுமதியுடன் சிறையில் இருந்த இவன் தப்பியது கர்நாடக போலீசாருக்கு அதிர்ச்சியை அளித்து உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள கோர்ட்டுகளில் இவனை போலீசார் ஆஜர்படுத்தும் போது இரண்டு கைகளையும் கைவிலங்கு போட்டு மிக பத்திரமாக கொண்டு வருவார்கள். அதுவும் டி.எஸ்பி தலைமையில் 10–க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு செல்வார்கள்.
பெண்களை கற்பழித்து கொல்லும் இவன் அவர்கள் வைத்து இருக்கும் செல்போனை எடுத்து சென்று அந்த செல்போன் மூலம் மற்றவர்களை தொடர்பு கொண்ட போது தான் இவன் போலீசில் பிடிபட்டான். மற்றபடி அவ்வளவு சீக்கிரம் இவன் போலீசில் மாட்டியது இல்லை. ஏற்கனவே இவன் தப்பியபோது இவனது தலைக்கு ரூ 10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. மாதத்தில் 10 நாட்களுக்கு பல்வேறு கோர்ட்டுகளில் ஆஜர் ஆகும் இவனை பற்றி எந்த பெண்ணும் அவ்வளவு தைரியமாக சாட்சி சொல்வது கிடையாது. இதனால் பல வழக்குகளில் இவன் விடுதலை ஆகி இருக்கிறான்.
ஓசூரை அடுத்த பேரண்ட அள்ளி பகுதியைச் சேர்ந்த சியாமளா தைரியமாக சாட்சி சொன்னதால் இவனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை கிடைத்தது. தற்போது கூட இவன் மீது தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் 24–க்கும் மேற்பட்ட கொலை மற்றும் கற்பழிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆந்திரா மற்றும் கர்நாடகா கோர்ட்டிலும் பல வழக்குகள் உள்ளன.malaimalar.com

கருத்துகள் இல்லை: