செவ்வாய், 3 செப்டம்பர், 2013

தங்க சங்கிலியை பறித்து விட்டதாக தே மு தி க MLA மீது போலீசில் புகார் !

காஞ்சிபுரம் மாவட்ட தேமுதிக செயலாளரும் செங்கல்பட்டு சட்டப் பேரவை உறுப்பினருமான அனகை முருகேசன், குரோம்பேட்டை நகரச் செயலாளர் கே.எம்.ஜெ.அசோக் ஆகியோருக்கிடையே கட்சி தொடர்பான விஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்ததாகவும் ஒருவரையொருவர் மதிப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவில் குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தபோது அனகை முருகேசன், அசோக் ஆகிய இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றி இருவரும் கைகலப்பில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதில் அசோக் காயமடைந்தார்.
இந்த தகராறின்போது அசோக் கழுத்தில் அணிந்து இருந்த 12 சவரன் தங்கச் சங்கலி காணாமல் போய் விட்டதாகக் கூறப்படுகிறது.
காயமடைந்த அசோக் நள்ளிரவில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சைக்குப் பின், செங்கல்பட்டு தேமுதிக எம்,எல்.ஏ. அனகை முருகேசன் மற்றும் இருவர் தன்னை தாக்கி, கழுத்தில் அணிந்து இருந்த 12 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்று விட்டனர் என்று குரோம்பேட்டை தேமுதிக நகரச் செயலாளர் அசோக் குரோம்பேட்டை காவல்நிலையத்தில் திங்கள்கிழமை புகார் செய்தார்.

இது தொடர்பாக எம்.எல்.ஏ. அனகை முருகேசன், அவரது கார் டிரைவர், தலைமைக் கழகப் பேச்சாளர் வளர்பிறைசோழன் ஆகியோர் மீது குரோம்பேட்டை போலீஸார் திருட்டு வழக்கு பதிவு செய்து அவர்களைத் தேடி வருகின்றனர்.
அடிதடி, திருட்டு உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாகிவிட்ட அனகை முருகேசன் மற்றும் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்

கருத்துகள் இல்லை: