வெள்ளி, 6 செப்டம்பர், 2013

பெங்களூரு கற்பழிப்பு குற்றவாளிகள் 6 பேருக்கும் ஆயுள் தண்டனை ! Fast track court sentenced life imprisonment


A fast-track court here Friday sentenced six people to life imprisonment after convicting them for the gangrape of a law student in the Bangalore University campus last October.
Pronouncing the sentence, Civil and Sessions Judge (V) Sangannavar said all the convicts would have to spend all their life in prison till their natural death
.நேபாளத்தை சேர்ந்தவர் வனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பெங்களூர்
பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து வருகிறார். கடந்த 2012–ம் ஆண்டு அக்டோபர் 13–ந் தேதி இரவு, ஞானபாரதியில் உள்ள வனப்பகுதியில் கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த நிர்மல் என்பவருடன் காரில் இருந்து பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 8 பேர் கும்பல் நிர்மலை சரமாரியாக தாக்கினார்கள். பின்னர் 8 பேரும் சேர்ந்து சட்டக்கல்லூரி மாணவியை கற்பழித்து விட்டார்கள். இதுதொடர்பாக ஞானபாரதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் தலைமறைவான குற்றவாளிகளை தேடி வந்தனர்.
சம்பவம் நடத்த ஒரு வாரத்திற்குள் ராமநகர் மாவட்டம் கைலஞ்ச ஊப்ளி, மெட்டாரிதொட்டி கிராமத்தை சேர்ந்த மல்லேஷ்(வயது 20), மத்தூரா(20), சிவண்ணா(20), எலியய்யா என்ற குமார்(23) ஈரய்யா(20), மைசூர் மாவட்டம் உன்சூர் அருகே மாஸ்துவநாடி கிராமத்தை சேர்ந்த தொட்டகிரய்யா(19) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் 4 பேர் ராமநகர் மாவட்டத்தில் உள்ள வருவாய் துறை அலுவலகம் அருகே கைது செய்யப்பட்டனர்.
மற்ற 2 பேரும் மெட்டாரிதொட்டி கிராமத்தில் பிடிபட்டனர். மேலும் 17 வயதான இளம் குற்றவாளியையும் போலீசார் கைது செய்திருந்தனர். இந்த வழக்கில் மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் 6 பேரும் மரம் வெட்டும் தொழிலாளிகள். காடுகளில் உள்ள மரங்களை வெட்டி விற்பதை இந்த கும்பல் தொழிலாக செய்து வந்தது. நாளடைவில் சட்டவிரோதமாக சந்தன மரங்களை வெட்டி விற்பனை செய்யும் வேலையிலும் ஈடுபடத் தொடங்கினர்.

இந்த கற்பழிப்பு வழக்கில் ராஜா என்பவர் தலைமறைவாக இருக்கிறார். இளம் குற்றவாளி தொடர்பான வழக்கு விசாரணை இன்னும் கோர்ட்டில் நடந்து வருகிறது. சட்ட கல்லூரி மாணவி மீதான கற்பழிப்பு வழக்கு பெங்களூர் சிட்டி சிவில் கோர்ட்டில் உள்ள 5–வது விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி சங்கண்ணாநவர் முன்னிலையில் நடைபெற்று வந்தது. சாட்சிகள் மற்றும் குற்றவாளிகளிடம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விசாரணை முடிந்தது.

அப்போது குற்றவாளிகள் 6 பேருக்கும் இன்று தண்டனை வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார். கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுமா? அல்லது ஆயுள் தண்டனை கிடைக்குமா? என்று அனைத்து தரப்பினர் மத்தியிலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், காலையில் நீதிபதி சங்கண்ணாநவர், கற்பழிப்பு குற்றவாளிகளான ராமு என்ற மல்லேஷ், மத்தூரா, ஈரய்யா, தொட்டகிரய்யா, சிவண்ணா, எலியய்யா ஆகிய 6 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். இதை கேட்ட குற்றவாளிகள், அவர்களது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தார்கள்.

அதைத்தொடர்ந்து, 6 பேரையும் போலீசார் கோர்ட்டில் இருந்து பலத்த பாதுகாப்புடன் பரப்பன அக்ரஹார சிறைக்கு கொண்டு சென்றனர். சட்டக்கல்லூரி மாணவி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கற்பழிக்கப்பட்டார். அதன்பிறகு கடந்த 11 மாதத்தில் வழக்கு விசாரணை வேகமாக நடத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதுகுறித்து அரசு வக்கீல் டி.கே.பட்டு கூறுகையில், சட்டக்கல்லூரி மாணவி கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு குறுகிய காலத்தில் தண்டனை கிடைக்க வேண்டும் என்பதற்காக வழக்கு விசாரணை வேகமாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் 31 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு இருந்தார்கள். முதல் சாட்சியாக மாணவியும், 2–வது சாட்சியாக மாணவியின் நண்பரும் சேர்க்கப்பட்டிருந்தனர்.

வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்கள், சம்பவ இடத்தில் கைப்பற்றிய 30–க்கும் மேற்பட்ட பொருட்கள் கோர்ட்டில் தகுந்த நேரத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதனால் 11 மாதத்திற்குள் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்திருக்கிறது. கற்பழிப்பு வழக்கு என்பதால் எல்லா சம்பவத்தையும் ஆராய்ந்து தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது, என்றார். malaimalar.com

கருத்துகள் இல்லை: