புதன், 4 செப்டம்பர், 2013

ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி அமுல் செய்ய மத்திய அரசு யோசனை !

ஐதராபாத்: தெலுங்கானா தனி மாநில கோரிக்கைக்கு எதிர்ப்புதெரிவித்து வரும் நிலையில் பிரச்னைகளை சமாளிப்பதற்காக ஆந்திர மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. தெலுங்கானாவிற்கு எதிர்ப்பு: ஆந்திராவை பிரித்து தெலுங்‌கானா மாநிலம் அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல்அளித்துள்ளது. இந்நிலையில் மாநிலத்ததை பிரிக்க கூடாது என்பதை வலியுறுத்தி கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக அனைத்து தரப்பு மக்களும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் அரசு நிர்வாகம் முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது.
இத‌னை தவிர்க்கும் விதமாக மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தலாமா ? என மத்தியஅரசு ஆலோ‌சனை நடத்தி வருகிறது.
அரசு ஊழியரகளின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு எதிரான மனு விசாரணையின் போது கருத்து தெரிவித்துள்ள உதவி சொலிசிட்டர் போனம் ‌‌அ‌சோக்கவுட் இத‌னை காரணமாக கூறி ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த முடியாது என தெரிவித்தார். முதல்வர் கடும் எதிர்ப்பு: தெலுங்கானா தனி மாநில அறிவிப்பிற்கு பின்னர் ஆளும் காங்கிரஸ் கட்சி தரப்பில் இருந்து எம்.பிக்கள், எம்.‌எல்.ஏக்கள் பலர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து அதற்கான கடிதங்களை கவர்னரிடம் அளித்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் கிரண் குமார் ரெட்டி ‌கட்சிதலைவர் சோனியாவை சந்தித்து தனி மாநில கோரிக்கைக்கு கிளம்பியிருக்கும் எதிர்ப்பு குறித்து விவாதித்தார். இருப்பினும் முதல்வரின் கருத்து நிராகரிக்கப்பட்டது. முன்னதாக கிரண்குமார் ரெட்டி தன்னுடைய ஆதரவாளர்கள் மத்தி்யில் பேசுகையில் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டாம் விரைவில் நல்ல பதில் வரும் என நம்பிக்கை தெரிவித்தார்.

கட்சி தலைவர் சோனியாவுடன் பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கிரண்குமார்ரெட்டி மக்கள் தான் எஜமானர்கள் மக்களின் கருத்தை மதிக்க தவறினால் அரசியல் வாதிகள் அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் என கூறினார். ‌மேலும் ‌தெ‌லுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டால் மேலும் இரு மாநிலங்களிடையே கிருஷ்ணா நதிநீரை பங்கிடுவதில் பிரச்னை ஏற்பட்டு தண்ணீர் போருக்கு வழிவகுக்கும் சூழ்நிலை உருவாகும்என எச்சரித்தார்.
காங்கிரஸ் தீவிரம்:


இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே கூறுகையில் தனிமாநிலம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு 20 தினங்களாக அறிக்கைகளை தயாரித்து வருகிறது. தனி மாநிலம் அமைவது உறுதி. இதில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது என கூறினார்.
அதே போல் கட்சியின் பொது செயலாளர் திக்விஜய்சிங் கூறுகையில் தனி மாநில கோரிக்கை என்பது அனைத்து அரசியல் கட்சிகளின் பரிந்து‌ரையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என கூறினார்.

கருத்துகள் இல்லை: