ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

5 லட்சத்திற்கு வட்டி 50 லட்சம் ! கந்து வட்டி கொலை! மீண்டும் தலைதூக்கும் கந்துவட்டி கலாச்சாரம்


சைதாப்பேட்டை குமரன் நகர் சுப்பிரமணிய தெருவைச் சேர்ந்தவர் வீரப்பன் (50). கிண்டியில் எலெக்ட்ரிக் போர்டு தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் கந்து வட்டி தொழில் நடத்தி வரும் அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து, சண்முகம் ஆகியோரிடம் ரூ. 5 லட்சம் கடன் வாங்கினார். கடன் தொகையை அவர் கொடுக்கவில்லை. ஆனால் வட்டியாக மட்டும் 50 லட்சம் கொடுத்து உள்ளார். கடந்த 2 மாதத்துக்கு முன்பு மாரிமுத்து, சண்முகம் இருவரும் வீரப்பனின் வீட்டுக்குச் சென்றனர். கடன் தொகை 5 லட்சத்தை தரும்படி கேட்டனர்.
வீரப்பனின் குழந்தைகளின் கழுத்தில் கத்தியை வைத்து பணத்தை தராவிட்டால் குழந்தையையும், உன்னையும் கொன்று விடுவோம் என்று கொலை மிரட்டல் விட்டனர்.

பின்னர் அங்கிருந்து சென்று விட்டனர். இதனால் பயந்து போன வீரப்பன் சைதாப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
இதனால் மாரிமுத்துவும், சண்முகமும் ஆத்திரம் அடைந்தனர். வீரப்பனை கொலை செய்ய சுற்றி வந்தனர்.
நேற்று இரவு 11 மணிக்கு கிண்டியில் பணியை முடித்து கொண்டு வீரப்பன் மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். சுசிலா தெருவில் வீரப்பனை 2 பேரும் வழி மறித்தனர். கடன் தொகை குறித்து பேசி கொண்டு இருந்தனர்.
அப்போது மாரிமுத்துவுடன் வேலை பார்க்கும் ஆனந், ஜெகன், மூர்த்தி, அருள் ஆகியோர் அங்கு வந்தனர்.
அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் வீரப்பனை பலமாக தாக்கினர். இதில் அவர் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் அனைவரும் தப்பி சென்று விட்டனர்.
குமரன் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீரப்பன் உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வீரப்பனின் மனைவி உமாசெல்வி கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆனந், ஜெகன், மூர்த்தி, அருள் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
மாரிமுத்துவும், சண்முகமும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கந்து வட்டி தகராறில் தொழில் அதிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படத்தி உள்ளது. இறந்த வீரப்பனுக்கு சிவக்குமார் என்ற மகனும் ரேபோக்காள், நெசியாள் என்ற 2 மகள்களும் உள்ளனர்.malaimalar.com 

கருத்துகள் இல்லை: