
இதற்கு அனுமதியும் கொடுக்கப்பட்டது. பின்னர் எந்த நோக்கத்துக்காக பெங்களூருக்கு வழக்கின் விசாரணை மாற்றப்பட்டதோ அதற்கு எதிராகவே அரசு வழக்கறிஞர் பவானிசிங்கின் செயல்பாடு என்று இருக்கிறது திமுக சார்பில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. பவானிசிங் வாபஸ் இதைத் தொடர்ந்து கர்நாடகா அரசுக்கு மாநில உயர்நீதிமன்றம் விளக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதைத் தொடர்ந்து பவானிசிங்கை வாபஸ் பெறுவதாகவும் கர்நாடகா அரசு அறிவித்தது. உச்சநீதிமன்றத்தில் ஜெ. முறையீடு பவானிசிங் வாபஸ் பெறப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா முறையீடு செய்தார். இம்மனு நீதிபதிகள் பி.எஸ்.சவுகான் மற்றும் எஸ்.ஏ.பாப்டே அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.என்.ராவ், ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை பொறுத்தவரை நான்கு வழக்கறிஞர்களின் பெயர்களை கர்நாடக உயர்நீதிமன்றம் மற்றும் மாநில அரசு பரிந்துரை செய்தது என்றும், அந்த பெயர்களை விட்டு விட்டு புதிதாக பவானிசிங்கை கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) நியமித்ததாகவும் தெரிவித்தார். மேலும் பவானி சிங் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருந்ததால், உடனடியாக கர்நாடக அரசு அவரை திரும்பப் பெற்றதாக வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, அரசு வழக்கறிஞர் நியமனம் செய்யப்பட்டு ஏழு மாதங்கள் கழித்துத்தான் கர்நாடக அரசுக்கு இது தெரியவந்ததா என கேள்வி எழுப்பினார். இதைத் தொடர்ந்து பவானிசிங் நியமனம், நீக்கம் தொடர்பான ஆவணங்களை நாளைக்குள் தாக்கல் செய்ய கர்நாடகா அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக