வியாழன், 7 மார்ச், 2013

, தே.மு.தி.க ம.தி.மு.க.,வைப் போன்று அல்லல்பட வேண்டியது தான்.


தமிழக அரசியலில், தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக, அன்று வைகோவின், ம.தி.மு.க.,வையும், மூப்பனார் உருவாக்கிய, த.மா.கா.,வையும் மக்கள் எதிர்பார்த்து ஏமாந்தனர்.அதன் பின், 2005 கடைசியில், கட்சியைத் துவக்கிய விஜயகாந்த், "மக்களுடனும், தெய்வத்துடனும் மட்டுமே கூட்டணி' என, கட்சி ஆரம்பித்து, அன்று, 8.38 சதவீத ஓட்டுகளை பெற்றார்.கடைசியாக, 2009 லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, 10 சதவீத ஓட்டுக்களைப் பெற்றார். அதுவரை ஒளிந்து பயணம் செய்த அவரின் கப்பல், 2011ல் அ.தி.மு.க.,வுடன் இணைந்து பயணித்ததால், 29 இடங்களில் வெற்றி கிட்டி, எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்தார். ஆனால், அவரின் தனித்துவத்தை இழந்து விட்டார்.எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டு, சிறப்பாக பணியாற்றுவார் என, எதிர்பார்த்தவர்களுக்கு, ஏமாற்றத்தைத் தந்தது மட்டும் அல்லாமல், தன் குண நலத்தால் நடுநிலை வாக்காளர்களின் நம்பிக்கையை இழந்து வரும் சூழலில், தற்போது இருக்கிறார்.வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து செயல்படப் போவதாக, ஊடகச் செய்திகள் வெளிவருவது, தே.மு.தி.க.,வின் வளர்ச்சிக்கு நிச்சயம் வழி வகுக்காது.ஏனெனில், சென்ற தேர்தலின் போது, தி.மு.க.,வின், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலை முன்னிறுத்தித் தான் விஜயகாந்த் பிரசாரம் செய்து வெற்றி பெற்றார். இப்போது தன் பேச்சை அவர் மாற்றி பேசினால், யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.தி.மு.க., தனக்கு ஆதரவாக, ஒரு ராஜ்ய சபா எம்.பி., பதவியை, தன் மனைவிக்கோ, மைத்துனருக்கோ கிடைக்க ஆதரவு தரும் என, நினைத்து, தி.மு.க.,வின் பக்கம் அணி மாறினால் பயன் தராது.ஏனெனில், தற்போது ஐந்தாவது எம்.எல்.ஏ.,யாக, சுரேஷ்குமார் அணி மாறிவிட்டார். விரைவில் இன்னும் ஒரு சிலர் அணி மாறி விட்டால், தி.மு.க.,வை விட, தே.மு.தி.க., பலம் குன்றி போகப் போவதும், எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை, அவர் இழக்கப் போகும் நாளும் வெகு தொலைவில் இல்லை.எப்போதுமே, ம.தி.மு.க.,வைப் போன்று, கடைசி வரை இவர் கட்சி அல்லல்பட வேண்டியது தான். dinamalar.com அ.குணா, சிதம்பரத்திலிருந்து எழுதுகிறார்:

கருத்துகள் இல்லை: