திங்கள், 4 மார்ச், 2013

கோவை மாவட்டத்தில் அதிக பெண் கரு. சிசு கொலைகள்

தமிழக மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குனரகமும், டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி என்.சி.சி., மாணவர்களும், தமிழகத்தில் உள்ள, 18 மாவட்டங்களில், மேற்கொண்ட ஆய்வில், கோயம்புத்தூர் மாவட்டத்தில், அதிகபட்சமாக, பெண் கருக்கொலை மற்றும் சிசு கொலைகள் நடந்ததாக, 42.15 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
சென்னை, அரும்பாக்கம், டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி என்.சி.சி., மாணவர்கள் 20 பேர், தமிழக மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இயக்குனரகத்தோடு இணைந்து, பெண் கருக்கொலை மற்றும் சிசு கொலைக்கு எதிராக தமிழகம் முழுவதும் இரு சக்கர வாகனங்கள் மூலம் கடந்த மாதம், 12ம் தேதி முதல் 27ம் தேதி வரை, விழிப்புணர்வு பிரசார பயணத்தை மேற்கொண்டனர்.
மொத்தம், 16 நாட்கள் நடந்த இப்பயணத்தில், வேலூர், கோயம்புத்தூர், கன்னியாகுமரி, தஞ்சாவூர், விழுப்புரம் உள்ளிட்ட, 22 மாவட்டங்களில், 3,160 கி.மீ., தூரம் பயணித்து, 1.5 லட்சம் மக்களை நேரடியாக சந்தித்து, அவர்களிடம் துண்டு பிரசுரம் மற்றும் வீதி நாடகங்கள் மூலம், பெண் குழந்தையின் முக்கியத்துவம் குறித்தும், அவர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டன.விழிப்புணர்வு பிரசார பயணத்தில், 18 மாவட்ட பகுதிகளில், பெண் கருக்கொலை மற்றும் சிசு கொலை நடந்துள்ளதா?கருவிலிருக்கும் குழந்தையின் பாலினம் பற்றி அறிந்து கொள்வது குற்றம் என்பது மக்களுக்கு தெரியுமா? பிறக்கும் முதல் குழந்தை பெண் என்றால் விரும்புகிறார்களா? உள்ளிட்ட, 11 கேள்விகள் மூலம், 7 ஆயிரத்து 641 பேரிடம் ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வறிக்கை நேற்று டி.ஜி.வைஷ்ணவ்கல்லூரியில் வெளியிடப்பட்டது. ஆய்வில் தெரியவந்துள்ளவை:
18 மாவட்டங்களிலும் 18.41 சதவீதம் பேர், தங்கள் பகுதிகளில், பெண் கருக்கொலை மற்றும் சிசு கொலை நடந்துள்ளதாக, தெரிவித்துள்ளனர். இதில், அதிகளவாக 42.15 சதவீதம் பேர்,கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ளது.
பெண்களுக்கு இருக்கும் சட்ட உரிமைகள் பற்றி, 62.72 சதவீதம் பேர் அறிந்துள்ளனர்.கடலூர் மாவட்டத்தில், 47 சதவீதம் பேர், அம்மாவட்டத்தில் கருவில்இருக்கும் குழந்தைகளின் பாலினத்தை, மருத்துவர்கள் கூறுவதாகதெரிவித்துள்ளனர்.ஸ்கேன் மையங்களில், கருவின் பாலினம் குறித்து தெரிவிக்கப்படுவதாக, திருப்பூர் மாவட்டத்தில் 82.63 சதவீதத்தினர் தெரிவித்தனர்.

கருவிலிருக்கும் குழந்தையின் பாலினம் பற்றி, அறிந்து கொள்வது குற்றம் என்பதை, நாமக்கல் மாவட்டத் தில் 8 சதவீதத்தினர் மட்டுமே அறிந்து உள்ளனர்.பெண்களுக்கு குறைந்தபட்ச திருமண வயது 18 என்பதை 78.47 சதவீதத்தினர் அறிந்துள்ளனர். - நமது நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: