சனி, 9 மார்ச், 2013

நடிகைகளுக்கு தாராளமாக செலவழிச்சோம்: பைன் பியூச்சர் இயக்குனர்கள் வாக்குமூலம்

கோவை: பணம் அதிகளவில் சேர்ந்ததால், என்ன செய்வது என்று தெரியாமல் இஷ்டத்துக்கு சொத்துக்களை வாங்கி குவித்து செலவழித்ததாக "பைன் பியூச்சர்' இயக்குனர்கள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.கோவை, பீளமேட்டில் "பைன் பியூச்சர்' எனும் இணையதள நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதம் 10 ஆயிரம் வழங்கப்படும், ஓராண்டின் இறுதியில் முதலீடு செய்த பணம் திருப்பித் தரப்படும் என, பலவிதமான அறிவிப்புகளை வெளியிட்டது. இதை நம்பி, கோவை, திருப்பூர், ஈரோடு உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் 800 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்தனர்.திடீரென இயக்குனர்கள் இருவரும் தலைமறைவானார்கள். தலைமறைவானவர்களை கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சென்னை வளசரவாக்கத்தில் கைது செய்தனர். இயக்குனர்கள் செந்தில்குமார், விவேக் மற்றும் அவரது சகோதரர் நித்தியானந்தம் ஆகியோரை கோவை "டான்பிட்' கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஒன்பது நாள் "கஸ்டடி' எடுத்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.போலீஸ் வாக்குமூலத்தில் இயக்குனர்கள் இருவரும் கூறியதாவது:
நாங்கள் இரண்டு பேரும் தனியார் நிறுவனத்தில் ஒன்றாக பணிபுரிந்தோம். கான்பூரில் செயல்பட்ட "பைன் பியூச்சர் இந்தியா' நிறுவனத்தின் இயக்குனர்கள் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்த 140 கோடி பணத்துடன் தலைமறைவானது தெரியவந்தது. அதே போல் இங்கும் ஒரு நிறுவனத்தை துவக்க நினைத்து, 2009ம் ஆண்டு "பைன் பியூச்சர்' பெயரில் இணையதள நிதி நிறுவனத்தை துவக்கினோம்.  என்ஜாய் பண்ணுங்க. கருத்தெல்லாம் சொல்லி என்னத்துக்கு ஆவ போவுது.
துவக்கத்தில், முதலீடு செய்தவர்களுக்கு உறுதியளித்தது போல் பணத்தை கொடுத்தோம். போக, போக அதிகளவு பணம் சேர்ந்தது. நிறுவனத்தில் ஏஜென்டுகளாக சேர்ந்தவர்கள் அதிகளவு வாடிக்கையாளர்களை கொண்டு வந்தனர். இதனால், கோடிக் கணக்கில் பணம் கொட்டியது. ஏஜென்ட்டுகளை கவரும் வகையில், பல இடங்களுக்கு சுற்றுலா அழைத்து சென்று மது,மாது விருந்துகள் அளித்தோம்.பணத்தை என்ன செய்வது என, தெரியாமல் பல இடங்களில் இஷ்டத்துக்கு நிலங்களையும், கார், தங்கம், வீடு போன்ற சொத்துகளையும் வாங்கி குவித்தோம். அதிகளவு பணம் சேர்ந்ததால் தலைமறைவானோம். போலீசிடம் சிக்காமல் இருக்க, வடஇந்தியா, தென் இந்தியா என, இடத்தை மாற்றிக் கொண்டே இருந்தோம். இறுதியாக எங்களுடைய மொபைல் போன் மற்றும் இணைதள டவர்கள் மூலம் போலீசார் எங்களை பிடித்துவிட்டனர்.இவ்வாறு வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.போலீசார் கூறுகையில், "" தற்போது முதல் கட்ட விசாரணை முடிந்துள்ளது. நிறுவனத்தில் யார், யார் ஏஜன்டுகளாக பணியாற்றினார்கள், முதலீடு செய்தார்கள் என்பது குறித்து பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. நிறுவனத்தில் சேர்ந்த பின் ஏஜென்டுகள் வாங்கிய நகை, பணம் சொத்துகள் குறித்து விசாரிக்கப்பட்டு, அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது'', என்றனர்.

நடிகைகளுக்கு பணம் வாரி இறைப்பு

போலீசார் கைதான மூவரிடமும் மேற்கொண்ட விசாரணையில், நிறுவனத்தின் சார்பாக ஏஜென்டுகள் மற்றும் வாடிக்கையாளர்களை கவர பல இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாகவும், இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நடிகைகளுக்கு பணத்தை வாரி இறைத்ததாகவும் தெரிவித்துள்ளனர். இந்த மோசடி தொடர்பாக சினிமா டிகைகளிடமும் போலீசார் விசாரிக்க வாய்ப்புள்ளது

கருத்துகள் இல்லை: