சனி, 9 மார்ச், 2013

தோட்டா தரணி: சுதாகரன் திருமணத்துக்கு இலவசமாக மேடை அமைத்து கொடுத்தேன்


பெங்களூரு: முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்துக்கு, மேடை வாசல் அலங்காரத்தை இலவசமாக செய்து கொடுத்தேன்,'' என, சினிமா ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணி, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில், சாட்சிம் அளித்தார்.
முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதான, சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில், ஜெயலலிதா தரப்பில், சினிமா ஆர்ட் டைரக்டர் தோட்டாதரணி நேற்று சாட்சியம் அளித்தார். அவர் கூறியதாவது:கடந்த, 40 ஆண்டுகளாக சினிமா துறையில் ஆர்ட் டைரக்டராக உள்ளேன். 1995ல் நடந்த சுதாகரன் திருமணத்துக்கு, திருமண மேடை, வாசல் அலங்காரம் செய்தேன்.என் குழந்தை பருவத்திலிருந்தே, நடிகர் சிவாஜிகணேசனை தெரியும். அ.தி.மு.க., வை சேர்ந்த காஞ்சி பன்னீர் செல்வம், என்னை சந்தித்து, திருமண மேடை, வாசல் அலங்காரம் செய்யும்படி கேட்டார். என் உதவியாளர் ரமேஷிடம் கூறி, முக்கிய பணிகளை செய்து கொடுத்தேன். இதை, வருமான வரித்துறை அதிகாரிகளிடமும் எழுத்து பூர்வமாக தெரிவித்துள்ளேன்.மேடை, வாசல் அலங்கார வேலைக்காக, பணம் எதுவும் வாங்கவில்லை; திருமணத்துக்காக, இது போன்ற வேலைகளை செய்யும்போது, பணம் வாங்க மாட்டேன்.
அடடா இந்த ஆள் ரொம்ப நல்லவன்டா ..திருமணத்துக்காக, இது போன்ற வேலைகளை செய்யும்போது, .. இது எனக்கு தெரியாம போச்சே... இது தெரிஞ்சிருந்தா என் தங்கச்சி கல்யாணத்துக்கு இவருகிட்டே கேட்டிருப்பேன்...
வருமான வரி துறையினருக்கு, நான் அளித்த பதிலின் நகலை கொண்டு வரவில்லை. யாருக்காகவும் பொய் சொல்லவில்லை.இவ்வாறு தோட்டாதரணி கூறினார்.
இதைத் தொடர்ந்து, ஜெயலலிதா தரப்பில், ஆறு பேர் சாட்சியம் அளித்தனர். தென் ஆற்காடு மாவட்டத்தின் அ.தி.மு.க., முன்னாள் இளைஞரணி செயலாளர் மணிராஜ்: நானும், அ.தி.முக., நிர்வாகிகளான கோதண்டபாணி, சவுந்திர பாண்டியன் ஆகியோர், அ.தி.மு.க., வினரிடம் பணம் வசூலித்து, 1992ல், ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு, 1.65 லட்சத்திற்கு, வரைவோலை எடுத்து அனுப்பி வைத்தோம்.உளுந்தூர் பேட்டை கிளை, அ.தி.முக., செயலாளர் கோதண்டபாணி:ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்காக, 1, 500 ரூபாய் கொடுத்தேன். இது போன்று, கட்சியினர் கொடுத்த பணத்தில் வரைவோலை எடுத்து ஜெயலலிதாவுக்கு அனுப்பினோம்.உளுந்தூர் பேட்டை கிளை பொருளாளர் சவுந்திர பாண்டியன்:நான், 2,000ம் ரூபாய் கொடுத்தேன்.முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம், சின்ன சேலம் கிளை செயலாளர் பாலசுப்ரமணியம், பொருளாளர் மணி:பணம் வசூலித்து, 2.16 லட்சம் ரூபாய்க்கு வரைவோலை எடுத்து, ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைத்தோம்.குறுக்கு விசாரணையில், அரசு தரப்பு வக்கீல் : இந்த பணம் வசூலித்ததற்கும், வரைவோலை எடுத்ததற்கும் ஆதாரமில்லை. இது, ஜெயலலிதாவுக்கு சொந்தமான பணம். அவரை காப்பாற்ற பொய் சொல்கிறீர்கள்.சாட்சிகள்: நாங்கள் வசூலித்த பணம்; பொய் சொலலவில்லை.இதையடுத்து, வழக்கு விசாரணையை, நீதிபதி பாலகிருஷ்ணா, வரும், 12 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார் dinamalar.com

கருத்துகள் இல்லை: