வியாழன், 7 மார்ச், 2013

டெல்லியில் தினமும் 4 பெண்கள் பலாத்காரம்

புதுடெல்லி: டெல்லியில் தினமும் 4 பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவதாக மாநிலங்களவையில் உள்துறை இணை அமைச் சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் தெரிவித்தார்.மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது, இது பற்றி அவர் எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:டெல்லியில் 2011ம் ஆண்டு 572 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த ஆண்டு (2012) மொத்தம் 706 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பிப்ரவரி 15ம் தேதி வரை மொத்தம் 181 பலாத்கார வழக்குகள்  போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் டெல்லியில் தினமும் 4 பெண்கள் பலாத் காரம் செய்யப்படுகின்றனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு, பலாத்கார சம்பவங்கள் 2 மடங்காக அதிகரித்துள்ளன.  பாலியல் பலாத்கார சம்பவங்களை கட்டுப்படுத்த  போலீசார்  நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருந்தாலும் ஆண்டுக்கு ஆண்டு பலாத்கார சம்பவங்கள் டெல்லியில் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது.ஒருபக்கம் விழிப்புணர்வு பிரசாரம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மாநில மற்றும் மத்திய அரசுகள் எடுத்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் இதுபோன்ற சம்பவங்கள் முழுமையாக ஒடுக்கப்பட வில்லை.


இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட  வழக்குகள் மீது நடத்தப்பட்ட விசாரணையில் குடும்பத்தை சேர்ந்த நெருங்கிய  உறவினர்கள், நண்பர்கள், ஏற்கனவே நன்கு அறிமுகமானவர்கள் £ன் பலாத்கார குற்றங்களில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள் ளது.கடந்த ஆண்டு நடந்த 706 பலாத்கார புகார்களில் 26 புகார்கள் மட்டுமே அடையாளம் தெரியாதவர்களால் நிகழ்ந்தவை.  இந்த 706 பலாத்கார வழக்குகளில் சுமார் 93.62 சதவீத வழக்குகளுக்கு ஏற்கனவே தீர்வு காணப்பட்டு விட்டன. கடந்த டிசம்பர் மாதம் ஓடும் பஸ்சில் 23 வயது மருத்துவ மாணவி ஒருவர் 6 காமக் கொடூரர்களால் பலாத்காரம் செய்யப்பட் டதும், இதனால் அந்த மாணவி பலியானதை தொடர்ந்து மத்திய அரசு சார்பில் பெண்களுக்காக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதும் எல்லாருக்கும் தெரியும்.இவ்வாறு அமைச் சர் ராமச்சந்திரன் கூறினார்.

கருத்துகள் இல்லை: