எனவே, ராஜாவின் சாட்சியத்தை ஏற்றுக் கொள்ள வைப்பதன் மூலம், காங்கிரசுக்கு நெருக்கடி கொடுக்க தி.மு.க., திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:;கடந்த, 2011ம் ஆண்டின் சட்டசபை தேர்தலில், சி.பி.ஐ., விசாரணையை மையமாக வைத்து, தி.மு.க., விடம் காங்கிரஸ் கட்சி, 63 தொகுதிகளை பெற்றது. இந்த லோக்சபா தேர்தலில், பெரியண்ணன் போக்கில், காங்கிரஸ் கட்சிக்கு, 6 தொகுதிகளை மட்டுமே கொடுக்க தி.மு.க., விரும்புகிறது. காங்கிரசுக்கு நெருக்கடி கொடுப்பதன் மூலம், அக்கட்சி அ.தி.மு.க., கூட்டணிக்கு சென்றாலும், தனது கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை என, தி.மு.க., தரப்பு கருதுகிறது அதாவது, இலங்கை தமிழர்கள் பிரச்னை மற்றும் காவிரி, முல்லை பெரியாறு, விலைவாசி உயர்வு, டீசல், பெட்ரோல் விலை உயர்வு, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளின் அடிப்படையில், மத்திய அரசை அ.தி.மு.க., கடுமையாக எதிர்த்து வருகிறது. இரு கட்சிகளும் இணைந்தால் மத்திய, மாநில அரசுகளின் எதிர்ப்பு ஓட்டுகள் தி.மு.க., அணிக்கு கிடைக்கும் என, தி.மு.க., கருதுகிறது.< இந்நிலையில், அ.தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றால், அ.தி.மு.க., அணியில் ம.தி.மு.க., இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இடம் பெற முடியாது. எனவே, அந்த கட்சிகள் தி.மு.க., அணிக்கு வர வேண்டிய நிலை உருவாகும். காங்கிரஸ் கட்சிக்கு இணையாக ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஓட்டுகள் சரிக்கட்டலாம் என்றும் தி.மு.க., தரப்பு கணக்கிட்டுள்ளது.
தேசிய அளவில் காங்கிரஸ் செல்வாக்கு இழந்து வருகிறது. குறிப்பாக, உ.பி.,யில் காங்கிரசுடன் கூட்டணி வைக்க விரும்பாமல், சமாஜ்வாதி அல்லது பகுஜன்சமாஜ் கட்சியில் கூட்டணி வைக்க அஜித் சிங் முயற்சி செய்கிறார். தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் உடலை ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிலைப்படுத்தி, காங்கிரசுக்கு உமர் அப்துல்லா நெருக்கடி அளிக்கிறார். ஆந்திராவில், ஜெகன்மோகன் ரெட்டியும், காங்கிரசுக்கு எதிராக உள்ளார். மகாராஷ்டிராவில், சரத்பவாரும், அடுத்த பிரதமர் கனவில் இருக்கிறார். இந்த மாதிரியான எதிர்ப்பு அலை வீசும் போது, தமிழகத்தில் மட்டும், காங்கிரசை ஏன் தூக்கி பிடிக்க வேண்டும் என, தி.மு.க., தரப்பு நினைக்க துவங்கியதால் தான், அடுத்தடுத்த நெருக்கடிகளை கொடுக்க தி.மு.க., தயாராகி வருகிறது. இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக