![]() |
Kousalya Naren attorney at law |
Shobitha Rajasooriar : ஆட்கொணர்வு மனு.
இந்தப் பதிவில் உள்ள பெண் கடந்த இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் சுயேச்சை குழு ஒன்றின் சார்பில் பங்குபற்றினார்.
கணிசமான வாக்குகளையும் அக்குழுவிற்கு பெற்றுக் கொடுத்தார்.
அவர் ஒரு சட்டத்தரணியும் கூட.
அவரது அரசியல் பிரவேசம் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் சென்று கொண்டிருந்த வேளையிலே,
சடுதியாக அவரது சுயேட்சை குழு தலைவரின் அறிக்கையின் படி அவர் அரசியலில் இருந்து விலகி விட்டார் என்று குறிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கருத்து சில சலசலப்புகளை மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. அதாவது குறிக்கப்பட்ட பெண் ஒரு சட்டவாளர்,
மற்றும் தேர்தலில் போட்டியிட்டவர் என்ற படியால் மக்களுக்கு தெரிந்த ஒரு நபர்.
அவர் தனது அரசியல் விருப்பு வெறுப்புகளை பொது வழியில் வந்து அவரே வெளியிட மறுத்த காரணம் என்ன என்பதும்,
அல்லது இந்தப் பெண் ஒரு சிக்கலில் மாட்டியுள்ள படியால் தான் அவரால் வெளியில் வர முடியாமல் இருக்கின்றதா என்பதுமான ஊகங்கள் எழுந்துள்ளன.
இவர் ஒரு பெண் சட்டத்தரணி என்பதால் பெண்களுக்கான அமைப்புகளும், சட்டத்தரணிகளுக்கான அமைப்புகளும் இப் பெண்ணின் பாதுகாப்பு கருதி தற்போதைய உண்மை நிலைய அறிய ஒரு ஆட்கொணர்வு மனுவை ஏன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யக்கூடாது?,
என்பது பல சமூக அக்கறை உள்ளவர்களின் கேள்வி, அது நியாயமானதும் கூட!
ராதா மனோகர் : இந்த நிமிடத்திற்குள் கௌசல்யா பொதுவெளிக்கு வரவில்லை என்றால் யாரவது நீதிமன்றத்தை அணுகி கவுசல்யாவை நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு உரிய ஆட்கொணர்வு மனுவை கொடுக்க வேண்டும்
கௌசல்யா ஒரு ஆபத்தில் சிக்கி இருப்பதற்கு வாய்ப்புண்டு!
அர்ச்சுனா கௌசல்யாவின் அரசியல் பொதுவெளி நீக்கம் பற்றி காணொளியில் கூறி இருப்பது பல சந்தேகங்களை உணர்த்தி உள்ளது
ஒரு சட்டத்தரணியான கௌசல்யாவின் அரசியலை தீர்மானிப்பதற்கு அர்ச்சுனா யார்?
அவரின் காணொளி பேச்சு முழுவதும் அசல் யாழ்மையவாத அடாவடித்தனமாகத்தான் தெரிகிறது!
"அவ (கௌசல்யா) விரும்பல்ல"
"நான் (அர்ச்சுனா)சொன்னேன் வேண்டாம்"
ஏனெண்டால் உங்களால முடியாது
"நான் அதை (கௌசல்யா) விட்டிருக்கிறேன்"
அவரின் பேச்சு முழுவத்தின் சாராம்சம் இதுதான்!
கௌசல்யாவுக்கு நான் ஒய்வு கொடுத்திருக்கிறேன்
ஒதுங்கி இருங்கோ நீங்க இனிமேல் முகப்புத்தகம் பாவிக்க தேவையில்லை
வாட்சப் பாவிக்க தேவையில்லை ..நம்பர் எடுத்திருக்கிறேன்
நீங்க கௌசல்யாவிட்ட ஏதாவது முக்கிய தகவல் சொல்லோணும் எண்டால்
நீங்க என்னோட கதைச்சு நான் அந்த தகவலை பகிர்ந்து கொள்ளுவேன்
இன்றில் இருந்து ம்ம்ம் நேற்றில் இருந்து கௌசல்யா இனி இந்த பொதுவெளியில அரசியலுக்கு வரப்போவதில்லை .
இப்ப உங்களுக்கு தெரியும் அரசியலுக்கு என்று ஒரு வெற்றிடம் வந்திருக்கிறது!
பொம்பிளைகளுக்கு .. உண்மையான ஒரு நல்ல பொம்பிளை லாயருக்கு
நீங்கள் யாரையாவது பிரதியிட இயலுமென்றால் பாருங்கோ
ஆனால் இனி கௌசல்யாவை பொறுத்தவரை இனிமேல் எந்த ஒரு நேரடியான அரசியல் செயல்பாடுகளில் செயல் படமாட்டா . அது நான் எடுத்த முடிவு
"அவ விரும்பல்ல"
"நான் சொன்னேன் வேண்டாம்"
ஏனெண்டால் உங்களால முடியாது
உங்களால் புஷ் பண்ண கூடிய அளவு புஷ் பண்ணி ஓராளோட அளவுக்கு மீறி புஷ் பண்ண கூடாது
அவாவை நான் கஷ்டப்படுத்த கூடாது என்று சொல்லி
"நான் அதை விட்டிருக்கிறேன்"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக