வியாழன், 27 மார்ச், 2025

சிவாஜி To பாரதிராஜா : பெரிய வீடா காட்டாத!

May be an image of 2 people

Esther Vijithnandakumar :  சிவாஜி கணேசன் அவர்கள் மாரடைப்பு  ஏற்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த போது சிவாஜி கணேசனை நலம் விசாரிப்பதற்காக இயக்குநர் பாரதிராஜா நேரில் சென்றுள்ளார்.
முடியாமல் எழுந்து உட்கார்ந்த சிவாஜி கணேசனிடம் பாரதிராஜா என்ன நடந்தது என கேட்கவும் மதியம் சாப்பிட்ட பிறகு இரண்டு மணிநேரம் தூங்குவது வழக்கம். உடன் மனைவி கமலாவும் தூங்குவார். சரியாக மாலை 4 மணிக்கு காபி போடுவதற்காக கமலா சென்று விடுவார். அன்றைக்கு பார்த்து நெஞ்சு வலி வரவே நாக்குக்கு அடியில் வைக்கும் மாத்திரை அருகில் இருக்கும் மேசையில் இருக்கும். அதை வைத்து கொண்டால் நான் பிழைத்து விடுவேன் என நினைத்தேன்.
ஆனால் என்னால் அதை எழுந்து எடுக்க முடியவில்லை. அவ்வளவு தான் என்னோட கதை இன்று  முடிந்துவிட்டது என முடிவு செய்தேன். அந்த நேரத்தில்தான் கமலா காபியுடன் வந்து நின்றார். அதற்கு பிறகு இதோ நான் இங்கே வந்து படுத்து இருக்கிறேன் என சிவாஜி பாரதிராஜாவிடம் கூறியுள்ளார்.


மேலும் பாரதிராஜாவிடம் நீ வீடு கட்டிவிட்டாயா என கேட்டுள்ளார். அதற்கு அவரும் நான்கு வீடுகள் கட்டியுள்ளேன் என்றாராம். பெரிய வீடா இல்லை சின்ன வீடா என கேட்டுள்ளார் சிவாஜி.
சுமாரான அளவுதான் ஏன் கேக்குறீங்க? என பாரதிராஜா  சிவாஜியிடம் கேட்டுள்ளார். 

அதற்கு அவர் சொன்னாராம், இல்லை தயவு செய்து பெரிய வீடா கட்டாத. நான் பிரபு, ராம் என கத்தி கத்தி கூப்பிட்டேன். படங்களில் நான் எவ்வளவு சத்தமாக பேசுவேன் என அனைவருக்கும் தெரியும். அப்படி உரக்க கத்தி கூப்பிட்டு பார்த்தேன் ஆனால் ஒருத்தரும் வரவில்லை. அதனால வீட்டில் வாசனை வரும் அளவிற்கு, கை எட்டும் தூரத்தில் எடுக்கும் அளவிற்கு, அழைத்தால் உடன் உதவிக்கு யாராவது வரும் அளவிற்கு சிறிய அளவில் வீட்டை கட்டினால் போதுமானது என பாரதிராஜாவிடம் சிவாஜி அறிவுரை கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: