புதன், 26 மார்ச், 2025

அதிமுக பாஜக கூட்டணி? - எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுக தலைவர்கள் அமித் ஷா சந்திப்பு!

 tamil.oneindia.com : சென்னை: "அதிமுகவை பொறுத்தவரை திமுக தான் எங்களுக்கு எதிரி, திமுக ஆட்சியை வீழ்த்த அதிமுக அனைத்து முயற்சிகளும் எடுக்கும்" என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.
டெல்லியில் அமித் ஷாவை சந்தித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “பாஜகவுடன் கூட்டணியா?” என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காமல் எடப்பாடி பழனிசாமி மழுப்பலாக பதிலளித்து உள்ளார்.


DMK Is Our Enemy EPS Vows to Overthrow DMK Government After Meeting Amit Shah

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று இரவு சந்தித்து சுமார் ஒன்றரை மணி நேரம் பேசினார். அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், தம்பிதுரை உள்ளிட்டோரும் இருந்தனர்.

2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி மீண்டும் ஏற்படுகிறதா என்ற கேள்வியை எடப்பாடி பழனிசாமி மற்றும் அமித்ஷாவின் இந்த சந்திப்பு ஏற்படுத்தியது. அமித் ஷாவின் ட்விட்டர் பதிவு இந்தக் யூகத்துக்கு மேலும் வலுவூட்டுவதாக அமைந்தது.

இரவு 10:15 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், "2026இல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும் ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்" என தமிழிலும் இந்தியிலும் குறிப்பிட்டிருந்தார்.

Recommended For You

இந்நிலையில் சென்னை திரும்பிய எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "அமித்ஷாவை எதற்காக சந்தித்தேன் என்பது குறித்து தெளிவாக பேட்டி கொடுத்து விட்டேன். கூட்டணி அமைக்கும்போது செய்தியாளர்களை அழைத்து தெரிவிப்பேன். 2026ஆம் ஆண்டு NDA கூட்டணி ஆட்சி அமைக்கும் என்ற அமித் ஷாவின் பதிவு அவருடைய கட்சியின் விருப்பம்." என்றார்.

பாஜகவுடன் கூட்டணி இல்லை என நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு திட்டவட்டமாகக் கூறியிருந்தீர்கள், அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, "எந்தக் கட்சியும் நிலையான கூட்டணியுடன் இருந்தது இல்லை; அரசியல் சூழலுக்கு ஏற்ப மாறும். திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் எல்லாம் நிலையாக இருக்கப்போகிறதா? சொல்ல முடியாது. அரசியல் சூழலுக்கு தக்கவாறு தேர்தல் கூட்டணி மாறும்.

தேர்தல் வரும் போதுதான் கூட்டணி தொடர்பாக ஒத்த கருத்துள்ள கட்சிகளோடு பேசி முடிவு எடுக்கப்படும். அதிமுகவை பொறுத்தவரை திமுக தான் எங்களுக்கு எதிரி; திமுக ஆட்சியை வீழ்த்த அதிமுக அனைத்து முயற்சிகளும் எடுக்கும்." எனக் கூறிவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

மூணாம் வகுப்பு படித்த கருணாநிதி திமுகவின் தலைவராக எப்படி ஆக முடிந்தது . விலை மாதர்களின் வேலை முடிந்த பின் அவர்கள் பணத்தை பறித்த தெலுங்கன் கருணாநிதி எப்படி தமிழ் நாட்டின் தலைவராக முடிந்தது . விபச்சார குடும்பத்தில் பிறந்த கருணாநிதி குடும்பமே ஸ்திரீலோலர்களாகவும் திருடர்களாவும் இருந்தாலும் எப்படி மக்கள் அவர்களை நம்பி ஓட்டு போடுகிறார்கள் .